விடாமுயற்சி அம்மணிக்கு வச்ச ஆப்பு! கடுங்கோபத்தில் எரிந்து விழும் திரிஷா..

Actress Trisha is very angry because of the shooting of Vidaamuyarchi movie: உலகில் எத்தனையோ பெண்கள் இருந்தாலும் நான் ஏன் ஜெஸ்ஸியை காதலித்தேன் என்று சிம்பு கூறுவது போல் மிகவும் ஸ்பெஷல் ஆனவர்தான் திரிஷா. தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் திரிஷா.

இவர்  நடிப்பில் வெளியான லியோ, பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 பாகங்கள் மாபெரும் வெற்றியடைந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மாறி மாறி பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் திரிஷா அவர்கள். அஜித்தின் விடாமுயற்சி படம் கிடைக்காதா என ஏங்கி கொண்டிருந்தார்.

மகிழ்திருமேனியின் இயக்கத்தில் உருவாகி வரும் ஆக்சன் திரில்லர் மூவி விடாமுயற்சி. திரிஷா எதிர்பார்த்தது போலவே அஜித்துடன் விடாமுயற்சியில் நடிக்க கமிட் ஆனார். தற்போது அதுவே அவருக்கு தலைவலியாக வந்து முடிந்துள்ளது.

Also read: பண நெருக்கடியால் திண்டாடி வரும் விடாமுயற்சி.. இதுல அஜித், மகிழ் திருமேனி மீது கோபப்பட்டு என்ன பிரயோஜனம்

அம்மணி தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஒரு படமும் மலையாளத்தில் ஜீத் ஜோசப்புடன் ஒரு படமும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். மேலும் மணிரத்தினத்தின் தக்லைப்பில் கமலுடன் ஜோடி சேர்ந்து உள்ளார் திரிஷா. இப்படி நிற்க நேரமில்லாமல் நடித்துக் கொண்டிருக்க விடாமுயற்சி படத்தின் சூட்டிங் முடிக்க முடியாமல் இழுத்தடித்து வருகின்றனராம் பட குழுவினர்.

ஆரம்பத்தில் விடாமுயற்சி சான்ஸ் கிடைக்காதா என ஏங்கியவருக்கு இப்போது ஏண்டா கமிட் ஆனோம் என்று தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக புலம்பி வருகிறாராம். பொறுமைய வரவழைத்து நடிக்க போனாலும் சூட்டிங் நடக்கவே போராட்டமா இருக்காம். கமிட்டான மத்த படங்களிலிருந்து பிரஷர் மேல் பிரஷர் வர அம்மணி என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்தில் இருக்கிறாராம்.

இது மட்டும் இல்லாமல் இப்போது முரட்டு சிங்கிள் பாலிவுட் நடிகர் சல்மான்கான் கூட ஜோடிசேர்வதாக செய்திகள் வந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவராத நிலையில் விடாமுயற்சியின் காலதாமதம் இப்போதுள்ள தனது படங்களை பாதிப்பது மட்டுமல்லாமல்  பாலிவுட்டிலும் தனது முன்னேற்றத்தை தடுக்குமோ என தீவிர யோசனையில் ஆழ்ந்து உள்ளார் திரிஷா.

Also read: என்னது ரெட்டை வேடமா.? சஸ்பென்சை உடைக்க அடுத்தடுத்து வர உள்ள 5 விடாமுயற்சி அப்டேட்டுகள்