அரைச்ச மாவை அரைச்சுகிட்டு இருக்காங்க.. இனி இவங்க கூட நடிக்க முடியாது என விலகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை

டிஆர்பி-யில் டாப் இடத்தை பிடித்துக் கொண்டிருக்கும் விஜய் டிவியின் சீரியல்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளை தொடர்ந்து மாற்றுவதால் சின்னத்திரை ரசிகர்கள் எரிச்சலடைகின்றனர். அதிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இதுவரை ஒரு கதாபாத்திரத்திற்கு இரண்டு மூன்று நடிகைகள் மாறிவிட்டனர்.

அதிலும் இப்போது மூன்றாவது மருமகள் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சாய் காயத்ரி, சீரியலில் அரைச்ச மாவை அரைச்சுகிட்டு இருக்காங்க. இனி இவங்க கூட நடிக்க முடியாது என விலகி உள்ளார். மேலும் ஐஸ்வர்யாவாக முன்பு நடித்த விஜே தீபிகா மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Also Read: எந்த கேரக்டரா இருந்தாலும் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணனும்.. சினிமாவை வெறுத்த பாரதி கண்ணம்மா நடிகை

இந்த சீரியல் துவங்கப்பட்ட போது ஐஸ்வர்யா கேரக்டரில் நடிகை வைஷாலி நடித்து வந்தார். அவரைத்தொடர்ந்து விஜே தீபிகா நடித்தார். இந்நிலையில் விஜே தீபிகா இந்த கேரக்டருக்கு பக்காவாக பொருந்தி இருந்த நேரத்தில் தான் அவருடைய முகத்தில் இருந்த முகப்பரு காரணமாக அந்த சீரியலில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இருப்பினும் தீபிகா நடித்த சமயத்தில் கண்ணன்-ஐஸ்வர்யா ஜோடி பயங்கர பேமஸ் ஆனது. ஆகையால் சீரியலில் இருந்து விலகிய பிறகும் தீபிகா கண்ணனோடு சேர்ந்து அடிக்கடி ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு சோசியல் மீடியாவில் ஆக்டிவாகவே இருந்து வந்தார். இவர்களை மறுபடியும் சேர்த்து சீரியலில் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் விரும்பினார்கள்.

Also Read: சனியனை தூக்கி பனியனில் போட்டு கொண்ட பாண்டியன் குடும்பம்.. சகுனி வேலையை கச்சிதமாக செய்த மீனாவின் அப்பா

அவர்களுடைய விருப்பம் இப்போது நிறைவேற போகிறது. அதாவது ஐஸ்வர்யா கேரக்டரில் மூன்றாவதாக நடிகை சாய் காயத்ரி நடித்து வந்த நிலையில், திடீரென்று அந்த சீரியலில் இருந்து அவர் விலகுவதாக தெரிவித்துள்ளார்.

‘சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிப்பது கம்ஃபர்டபில் ஆக இல்லை. இந்த கேரக்டருக்கு நான் பொருத்தமான ஆள் இல்லை என்பது தெரிந்து விட்டது. அது மட்டுமல்ல இனி வரும் நாட்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கதைக்கு ஏற்ப ஐஸ்வர்யாவாக தன்னை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள விரும்ப மாட்டார்கள். ஆகையால் என்னுடைய சினிமா கெரியருக்காகவும் இந்த சீரியலில் இருந்து விலக விரும்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Also Read: சில்க் ஸ்மிதாக்கு போட்டியாக வந்த கிளாமர் நடிகை.. இருக்கும் இடம் தெரியாமல் வாழ்ந்து வந்த பரிதாபம்

இவருடைய இந்த கருத்தை பலரும் ஏற்றுக் கொள்கின்றனர். ஏனென்றால் கண்ணனுக்கு சாய் காயத்ரி சரியான ஜோடி அல்ல. சீரியலில் பார்க்கும் போது கண்ணனை விட சாய் காயத்ரி கொஞ்சம் போல்டாக தெரிவதால், அவர்களுக்கிடையே கெமிஸ்ட்ரி சுத்தமாகவே ஒர்க் அவுட் ஆகவில்லை. முன்பு நடித்த தீபிகா தான் கண்ணனுக்கு சரியான ஜோடி. ஆகையால் பழைய ஐஷுவை மறுபடியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Next Story

- Advertisement -