தமிழ் சினிமாவில் புது நெல்லு புது நாத்து என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சுகன்யா. தனது 22 வயது திரைத்துறையில் நுழைந்த இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து இருந்தார். 90களில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகையாக வலம் வந்தார்.
ஆனால் இவரது நிஜ வாழ்க்கை மிகவும் சோகமாக உள்ளது. தற்போது 52 வயதாகும் நடிகை சுகன்யா தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் சுகன்யா தனது கணவரை பிரிந்ததற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
சீரியல், சினிமா என இரவு பகல் பாராமல் பிசியாக நடித்து வந்த நடிகை சுகன்யாவுக்கு முன்னாள் அமைச்சர் ஒருவருடன் தொடர்பு இருந்ததாகவும், இதனால்தான் கணவருக்கும் சுகன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து இருக்கலாம் எனவும் செய்திகள் வெளியாகி வருகிறது.
விவாகரத்திற்கு பின்னர் சுகன்யா இரண்டாவது திருமணமும் செய்து கொள்ள வில்லை. தற்போது குழந்தைகள் கூட இல்லாமல் தனிமையில் தான் இருந்து வருகிறார். பின்னர் சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான ஜில்லுனு ஒரு காதல் படம் மூலம் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
சுகன்யா மட்டுமல்ல இவரைப் போன்று சினிமாவில் நடித்து வரும் பல நடிகர்கள் தங்களின் சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். திரையில் ரசிகர்களை மகிழ்விக்க சிரித்தும், அழுதும் நடித்து வரும் இவர்களை போன்ற நடிகர்களின் நிஜ வாழ்க்கையில் ஏகப்பட்ட சோகங்கள் ஒளிந்திருக்கும். உதாரணமாக நடிகை சில்க் ஸ்மிதாவை கூறலாம்.