சந்தேகப்பட்ட கணவர்.. விவாகரத்து செய்துவிட்டு 51 வயதில் தனிமையில் வாடும் சுகன்யா

சுகன்யா என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது சின்ன கவுண்டர் படத்தில் விஜயகாந்த் தொப்புளில் பம்பரம் விடுவது தான். கிளாமராக நடித்தாலும் திறமையான கதாபாத்திரங்களிலும் நடிக்க தவறவில்லை.

அன்றைய கால இளைஞர்களுக்கு சுகன்யா என்றாலே ஒரு பிரம்மை பிடித்தது போல தான். நம்ம வீட்டு பொண்ணு என்பது போன்ற தோற்றத்தில் ஈஸியாக ரசிகர்கள் மனதில் நுழைந்தார்.

அதனால் சினிமாவை தொடர்ந்து சீரியலிலும் தன்னுடைய கால் தடத்தை பதித்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்தார். இப்படி சினிமாவில் சாதித்த நடிகை சுகன்யா சொந்த வாழ்க்கையில் நிறைய தடுமாறிவிட்டார்.

2002ஆம் ஆண்டு ஸ்ரீதர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அடுத்த ஒரு வருடத்திலேயே அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்ட தனியே வந்து விட்டார். அதன்பிறகு இரண்டாம் திருமணம் செய்து கொள்ளவில்லை.

தற்போது 51 வயதை எட்டியிருக்கும் சுகன்யாவின் திருமண வாழ்க்கை ஏன் கசந்தது என்பதற்கான தகவல் தற்போது கிடைத்துள்ளது. சினிமாவிலும் சீரியலிலும் தொடர்ந்து இரவு பகல் பாராமல் நடித்து வந்துள்ளார் சுகன்யா.

திருமணமான ஆசையில் மனைவியுடன் நேரத்தை செலவிடலாம் என கணவர் இருந்தபோது சுகன்யா வேலை வேலை என சென்றது அவரை மிகவும் அப்செட் ஆக்கிவிட்டதாம். அதுமட்டுமில்லாமல் சுகன்யா மீது சந்தேகத்தையும் வைத்தாராம் கணவர். இதனால் ஆத்திரமடைந்த சுகன்யா, இருவருக்கும் ஒத்துவராது என விவாகரத்து செய்துவிட்டாராம். சுகன்யாவுக்கு வாரிசு யாருமில்லை என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

sukanya-cinemapettai-01
sukanya-cinemapettai-01
- Advertisement -spot_img

Trending News