பூவே பூச்சூடவா நாடகத்தில் இருந்து ரேஷ்மா விலகலா? இதோ அவரே கூறிய விளக்கம்

தமிழ் தொலைக்காட்சிகளில் என்னதான் ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் கேம் ஷோக்கள் வந்தாலும் சீரியல்களுக்கென்று தனி இடம் உண்டு. ரியாலிட்டி ஷோக்களை விட சீரியல்கள் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. வீட்டில் இருக்கும் பெண்கள் அதிகம் விரும்புவது நாடகம்தான் ஏன் என்றால் காலையில் ஆரம்பித்தால் அது பாட்டுக்கு இரவு பதினோரு மணி வரை செல்லும்.

டிவி தொலைக்காட்சிகளில் கிளுகிளுப்பான நடிகைகளைக் கொண்டு என்னதான் ரியாலிட்டி ஷோக்கள் நடத்தி வந்தாலும் தொலைக்காட்சிகளில் வெளிவரும் சீரியல்தான் எப்பவுமே கிங்.

முன்னாடியெல்லாம் பூவே பூச்சூடவா என்ற பெயரைக் கேட்டால் நினைவுக்கு வருவது நதியா நடித்த படம் தான். ஆனால் தற்பொழுது பூவே பூச்சூடவா என்ற பெயரை கேட்டால் ஜீ டிவியில் ஒளிபரப்பும் நாடகம் தான். 2017ம் ஆண்டு முதல் இந்த நாடகம் தெறி மாஸ் ஆக சென்று கொண்டிருக்கிறது. இதில் ரேஷ்மா முரளிதரன், கார்த்தி வாசுதேவன் போன்றவர்கள் நடித்து வருகிறார்கள்.

பூவே பூச்சூடவா சீரியல் நடிகை ரேஷ்மா, சக்தி என்ற ஒரு வேடத்தில் நடித்து ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே செல்கிறார். ஆனால் தற்பொழுது ரேஷ்மா இந்த நாடகத்தில் இருந்து விலகுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. இதனால் அவரின் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

ரசிகர்கள் மட்டும் அதிர்ச்சியடையவில்லை ரேஷ்மாவும் அதிர்ச்சி அடைந்துவிட்டார். அதனால் அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளார். அதாவது பூவே பூச்சூடவா நாடகத்தில் சக்தி எப்போவுமே இந்த ரேஷ்மா மட்டும்தான் என்று கூறி ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

poove-poochiduva-sakthi-reshma
poove-poochiduva-sakthi-reshma

என்னை பிடிக்காத சிலர் தொடர்ந்து இது போன்ற செய்திகளை பரப்பி கொண்டு வருகிறார்கள் என்றும், இந்த செய்திகள் முற்றிலும் வதந்தி என யாரும் நம்ப வேண்டாம். இந்த செய்திகளையும் யாரும் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்