இன்னும் நீங்கள் திருந்த வில்லையா.? பத்திரிக்கையாளர்கள் மீது கடுமையாக சீரிய ராஷ்மிகா மந்தனா

தற்போது தமிழ், தெலுங்கு என்று இரு மொழிகளிலும் பிரபல கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த அவர் தற்போது ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருக்கிறார்.

அவர் செல்லும் இடமெல்லாம் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். இப்படி ஏராளமான ரசிகர்களை கொண்டிருப்பதால் இவருக்கு படவாய்ப்புகளும் குவிந்து வருகிறது. சமீபத்தில் கூட அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று அவருக்கு புகழைத் தேடிக்கொடுத்தது.

அந்தப் படத்தில் அவர் ஆடிய சாமி என்ற பாடல் ரசிகர்களை ரொம்பவும் கவர்ந்துவிட்டார். அதனால் அவர் சோஷியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வந்தார். இந்நிலையில் புஷ்பா திரைப்படத்திற்கு பிறகு ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் தெலுங்கில் ஆடவல்லு மீகு ஹோகர்லு என்ற திரைப்படம் ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது.

இந்தப் படத்தின் பிரமோஷன் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்தது. அப்பொழுது அதில் கலந்து கொள்வதற்காக வந்த ராஷ்மிகா மந்தனா பேட்டி ஆரம்பிக்கும் முன்பு பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறார். அதாவது அவருக்கும் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கும் இடையே இருக்கும் காதலை பற்றி எந்த கேள்வியும் கேட்கக் கூடாது என்பதுதான் அது.

ஏன் என்று கேட்ட பத்திரிக்கையாளர்களிடம் ராஷ்மிகா, அவருடன் சேர்ந்து நடித்ததில் இருந்து இப்படி ஒரு வதந்தி கிளம்பி விட்டது. நானும் எங்களுக்குள் காதல் இல்லை என்று மறுத்து சொல்லி விட்டேன். ஆனாலும் இது பற்றிய செய்திகள் தான் பத்திரிக்கைகளில் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.

இதனால் எனக்கு பதில் சொல்லி அலுத்துவிட்டது. எனக்கு இப்போது திருமணத்தைப் பற்றி யோசிப்பதற்கு நேரமில்லை. பெரிய பெரிய ப்ராஜெக்ட் எல்லாம் கைவசம் இருப்பதால் நான் அதில் மட்டும் தான் என் கவனத்தை செலுத்துகிறேன். இதனால் இந்த டாபிக்கை விட்டுவிட்டு வேறு ஏதாவது கேளுங்கள் என்று பேட்டி ஆரம்பிக்கும் முன்பே அவர் பத்திரிக்கையாளர்களிடம் சற்று கோபமாகவே கூறிவிட்டாராம்.