பாலிவுட்டுக்கு ஆசைப்பட்டால் மட்டும் போதுமா, அடக்கியும் வாசிக்கணும்.. ஷாருக்கானால் அப்செட்டான நயன்

Actress Nayanthara: திருமணத்திற்கு முன்பு வரை படு பிசியாக தென்னிந்திய சினிமாக்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை நயன்தாராவுக்கு இப்போதைக்கு பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. நயன்தாராவின் சினிமா எதிர்காலத்துக்கு இப்போதைக்கு கடைசி நம்பிக்கையாக இருப்பது ஜவான் படத்தின் வெற்றியும், நடிகர் ஷாருக்கானும் தான்.

நயன்தாராவை பொருத்தவரைக்கும் தான் எப்போதுமே தனித்துவமாக தெரிய வேண்டும் என்பதற்காக கொஞ்சம் ஓவராக அலட்டிக் கொள்வார். கூட நடிக்கும் நடிகர்கள் எப்போதுமே தன்னை புகழ வேண்டும் என எதிர்பார்க்கும் ஒரு பேர்வழி தான். அதேபோன்று படப்பிடிப்பு, பட விழாக்கள் எல்லாம் தென்னிந்திய சினிமாவை பொருத்தவரை இவருடைய விருப்பப்படி தான் நடக்கும்.

Also Read:ஜவான் படத்துக்கு அட்லி வாங்கிய சம்பளம்.. நெல்சன்,லோகேஷ்க்கு எல்லாம் வாத்தியாராய் மாறிய குட்டி தம்பி

இங்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு ராணி போல் சுற்றிக் கொண்டிருந்த நயன்தாராவுக்கு, பாலிவுட் பயங்கர பல்பு கொடுத்து இருக்கிறது. இந்தி சினிமா உலகை பொருத்தவரைக்கும் நயன்தாரா கத்துக்குட்டி என்பதால், அறிமுக ஹீரோயினை எப்படி நடத்துவார்களோ, அப்படி தான் அம்மணிக்கு அங்கு எல்லா ட்ரீட்மெண்ட்டும் கிடைத்திருக்கிறது.

ஜவான் படத்தை பொருத்தவரைக்கும் எல்லாமே ஷாருக்கான் தான். அவர் வந்தால் தான் படப்பிடிப்பு நடக்கும். அவர் படப்பிடிப்புக்கு வரவில்லை என்றால் எல்லோருமே காத்து கிடைக்க வேண்டியது தான். அதுபோல் ஷாருக்கான் படப்பிடிப்பிற்கு வந்துவிட்டால் உடனே எல்லோரும் ஆஜராகி விட வேண்டும். இதனால் பல நாட்கள் ஷாருக்கான் காத்துக் கொண்டிருந்திருக்கிறார் நயன்.

Also Read:ரெண்டே நாளில் ஜெயிலர் படத்தை பின்னுக்கு தள்ளிய ஜவான்.. சுட்டு போட்டாலும் வெற்றியை தக்க வைக்கும் அட்லி

திருமணத்திற்கு பிறகு தென்னிந்திய சினிமா உலகம் நயன்தாராவை தொடர்ந்து புறக்கணித்து வந்ததால் அவர்கள் மூஞ்சில் எப்படியாவது கரியை பூச இந்தியில் ஜெயித்து விட வேண்டும் என்று நயன்தாரா கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தார். இப்போது அதற்காகத்தான் பாலிவுட்டில் பம்மிக் கொண்டு இருக்கிறார்.

அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தால் தான் மரியாதை என்பதை மறந்து விட்டு உயர பறக்க நினைத்து முகத்தில் கரியை பூசினது தான் மிச்சம். ஷாருக்கான் அடுத்தடுத்து இந்தி வாய்ப்புகள் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் மனக்கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறார். நயன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்பது இனி தான் தெரியும்.

Also Read:யாரு சாமி நீ, ஜவான் இத்தனை படங்களின் காப்பியா.? ஷாருக்கான் தலையில் ரெட் சில்லியைஅரைத்த அட்லி

- Advertisement -