அடேங்கப்பா மீனாவா இது!. 47 வயசுல இப்படி இருக்காங்களே.. வைரலாகும் புகைப்படங்கள்

Actress Meena: நடிகை மீனாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான மீனாவுக்கு தற்போது வயது 47. தென் இந்திய சினிமாவின் அத்தனை முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தவர் மீனா.

அப்போதைய காலகட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் மீனாவை கண்ணழகி என கொண்டாடி தீர்த்தார்கள். மீனாவின் படங்களில் அவருடைய கண்களே வசனங்களை பேசி முடித்து விடும். கமல், ரஜினி, சரத்குமார், விஜயகாந்த், முரளி, கார்த்திக், அர்ஜுன், அஜித் என அத்தனை முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்து இருக்கிறார் மீனா.

நடிகர் விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும் நடனம் ஆடினார். மீனாவின் மார்க்கெட் கொஞ்சம் சரிவடைந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் சாகர் என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு நைனிகா என்ற அழகான மகள் இருக்கிறார்.

மீனாவின் கணவர் கடந்த வருடம் நுரையீரல் பிரச்சனையால் இறந்துவிட்டார். அதன்பின்னர் மீனா முழுவதும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். ஏற்கனவே உடல் எடையை குறைத்திருந்த மீனா, சமீபத்திய புகைப்படத்தில் ரொம்பவே எடை குறைந்தது போல் காணப்படுகிறார்.

வெள்ளை கலர் டீ சர்ட், ப்ளூ கலர் ஜீன்ஸ் அணிந்து தன்னுடைய மாடல் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். பலரும் இளம் ஹீரோயினுக்கு போட்டியாக மீனா இன்னும் அதே அளவுடன் இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள். ஒரு வேலை கணவர் இறந்த சோகத்தில் மீனாவின் எடை குறைந்திருக்குமோ என நினைத்து பலரும் அவருக்கு தன்னுடைய ஆறுதலையும் சொல்லி வருகிறார்கள்.

Actress meena
Actress meena
Actress meena
Actress meena
Actress meena
Actress meena
Actress meena
Actress meena

Next Story

- Advertisement -