Kajal Agarwal Net Worth: ஆடுன காலும், பாடுன வாயும் சும்மா இருக்காதுன்னு சொல்லுவாங்க. இது யாருக்கு சரியா பொருந்துதோ இல்லையோ தமிழ் சினிமா நடிகைகளுக்கு பொருத்தமாக இருக்கும். நடிகைகள் திருமணம் செய்து புகுந்த வீட்டிற்கு போகும்போதே இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என மீடியாவுக்கு பேட்டி கொடுத்து விட்டு தான் போவார்கள்.
ஆனால் சுவற்றில் அடித்த பந்து போல உடனே சினிமா பக்கம் திரும்பி விடுவார்கள். ஜோதிகா, சிம்ரன் போன்றவர்களின் தொடங்கி ஐஸ்வர்யா ராய்க்க கூட இதுதான் நிலைமை. அப்போ நம்ம காஜல் அகர்வால் மறுபடியும் நடிக்க வந்ததில்லை தப்பு எதுவும் இல்ல தான்.
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா லாக்டவுன் சமயத்தில் கௌதம் கிச்சலு என்பவரை காஜல் அகர்வால் திருமணம் செய்து கொண்டார். அவர் மிகப்பெரிய பிசினஸ் மேன் என எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.
இதனால் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று டாட்டா காட்டிவிட்டு கையோடு ஆண் குழந்தையையும் பெற்றுக் கொண்டார். ஆனால் பழைய குருடி கதவைத் திறடி என மறுபடியும் அம்மா வீட்டுக்கு வந்தது போல சினிமாவுக்குள் புகுந்து விட்டார்.
திருமணம் ஆனாலும் கேமராவை விடாத காஜல்
என்னதான் புருஷன் பெரிய பணக்காரராக இருந்தாலும் நம்ம கையிலயும் சம்பாத்தியம் என்று ஒன்று இருக்கணும்னு காஜல் அகர்வால் நினைப்பதில் எந்த தப்பும் இல்லை தான். தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி கொண்டு இருக்கும் காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு விவரம் சமீபத்தில் வெளியாகி தலையை சுற்ற வைத்திருக்கிறது.
நடிகை காஜல் அகர்வால் திருமணம் ஆகி ஒரு குழந்தை பெற்ற பிறகு கூட ஒரு படத்திற்கு இரண்டு முதல் மூன்று கோடி சம்பளமாக வாங்குகிறாராம்.
இப்போதைக்கு அவருடைய கைவசம் இந்தியன் 2, இந்தியன் 3, சத்தியபாமா என்னும் தெலுங்கு படம், சீயான் விக்ரமுடன் கருடா படம், Thathaasthu என்னும் கன்னட படம் ஆகிய படங்கள் இருக்கின்றன.
அதுமட்டுமில்லாமல் பேனசோனிக், பாண்ட்ஸ், ப்ரூ காபித்தூள் போன்ற விளம்பரங்களுக்கு தூதுவராக இருக்கிறார். மேலும் திருமணத்திற்கு முன்பாகவே அவருக்கு ஆறு கோடி மதிப்பில் அப்பார்ட்மெண்ட் ஒன்றும் இருக்கிறது.
45 லட்ச ரூபாய் மதிப்பில் ஆடி கார் ஒன்றும், 95 லட்சம் ரூபாய் மதிப்பில் ரேஞ்ச் ஓவர், 24 லட்சம் ரூபாய் மதிப்பில் கோடா என்னும் சொகுசு கார்களும் வைத்திருக்கிறார். காஜல் அகர்வால் கணவர் கௌதம் கிச்சலு சொத்து மதிப்பு 70 கோடியை தாண்டும். மாதத்திற்கு மட்டும் 40 லட்சம் ரூபாய் வருமானம் அவருக்கு வருகிறது.