கணவன் இல்லாமலேயே வாரிசை பெற்றெடுத்த நடிகை.. இப்ப இனிஷியல் போட அப்பாவைத் தேடும் கொடுமை

அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் தான் இந்த நடிகை. அதன் பிறகு தொடர்ச்சியாக பெரிய இயக்குனர்கள், முன்னணி ஹீரோக்கள் என்று அனைவரின் படத்திலும் இவர் நடித்து அதிக பிரபலம் அடைந்தார்.

கடைசியாக இவர் பிரம்மாண்ட இயக்குனரின் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவர் சினிமாவை ஓரம் கட்டிவிட்டு தன் சொந்த நாட்டிற்கே பறந்து விட்டார். சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் நடிகை தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு பரபரப்பை கிளப்பி வந்தார்.

மேலும் வெளிநாட்டு தொழிலதிபர் ஒருவரை உருகி உருகி காதலித்து வந்த நடிகை திடீரென்று கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று பலரும் கூறிவந்த நிலையில் நடிகை தன் காதலரை நிச்சயதார்த்தமும் செய்து கொண்டார்.

ஆனால் திருமணம் செய்து கொள்ளும் முன்பே நடிகைக்கு குழந்தையின் பிறந்து விட்டது. அதன் பிறகும் ஒன்றாக வாழ்ந்து வந்த அந்த ஜோடி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். பின்னர் குழந்தையுடன் தனியாக வசித்து வந்த நடிகை இரண்டாவதாக ஒரு நபரை காதலித்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

ஆனால் அவரையும் திருமணம் செய்யாமல் இப்போது நடிகை தன் அம்மாவுடன் குழந்தையை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நடிகை மீண்டும் திருமணத்திற்கு தயாராகி வருகிறாராம். பிரபல நடிகருடன் டேட்டிங்கில் இருந்த நடிகை இப்போது அவரையே திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறாராம்.

ஏனென்றால் அந்த நாட்டின் சட்ட திட்டம் படி திருமணம் ஆகாமல் ஒரு குழந்தைக்கு அப்பா இவர்தான் என்று கூற முடியாது. அதனாலேயே நடிகை அந்த நடிகரை திருமணம் செய்து கொள்ள ரெடியாகி கொண்டிருக்கிறார். குழந்தைக்கு இனிஷியல் போட திருமணம் செய்து கொள்ளும் நடிகையின் இந்த செயல் தற்போது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

Next Story

- Advertisement -