ஒரு நாளுக்கு ஒரு லட்சம் நடந்த பேரம்.. பிக்பாஸ் டீமை துரத்திவிட்ட விஜய் டிவி பிரபலம்.!

biggboss-5
biggboss-5

மாயாண்டி குடும்பத்தார் படத்தில் தன் வெள்ளந்தியான நடிப்பின் மூலம் தமிழ் திரைப்பட ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தீபா. தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தவர். இவர் தந்தை ஒரு தமிழாசிரியர் சிறு வயது முதல் தீபாவுக்கு நடனத்தின் மீது ஆர்வம் இருந்தது மேற்படிப்புக்காக சென்னை சென்றார்.

தீபா, நடிப்பில் கொண்ட ஆர்வத்தால் சன் டிவியில் மெட்டி ஒலி சீரியல் வாய்ப்பு கிடைத்தது. தீபா தனக்கு வரும் கணவன் என்னை நடிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனை சொன்னதால் பல வரன்கள் தள்ளிப் போய்க் கொண்டு இருந்தது.

தீபா நிபந்தனைக்கு ஒத்துக் கொண்டவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகன்கள். பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துவந்த தீபா மாயாண்டி குடும்பத்தார் படத்தின் மூலம் பிரபலமானார். பிறகு கடைக்குட்டி சிங்கத்தில் கார்த்தியின் சகோதரியாக நடித்தார். விஜய் டிவியின் குக் வித் கோமாளி பங்குபெற்றார். அதைத் தொடர்ந்த விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வருகிறார்.

தற்போது மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, காமெடி ராஜா கலக்கல் ராணி, தெறி பேபி பங்குபெற்று அசத்தி வருகிறார். இப்பொழுது அவருக்கு பிக்பாஸில் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு அவர் மறுத்து விட்டார். ஒரு நாளைக்கு ஒரு லட்சம் தருவதாக கூறியும் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் தீபா.

பிக்பாஸ் வீட்டில் சென்றால் என்ன நடக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும். பலருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தாலும் பல அவமானங்களை சந்திக்க நேரும். இயக்குனர் சேரனையும் விட்டு வைக்காமல் நடந்த கூத்துலாம் தெரிந்த விஷயம் தான்.

இதில் தீபாவும் சற்று குண்டாக இருப்பதால் கிண்டல் கேலிக்கு ஆளாக கூடும் என அஞ்சியே பிக்பாஸ்லாம் வேண்டாம் என முடிவு எடுத்துள்ளாராம்.

Advertisement Amazon Prime Banner