சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

மாரடைப்பால் சேரன் பாண்டியன் பட பிரபலம் மரணம்.. பெரும் சோகத்தில் திரையுலகம்

மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ‘அவள் அப்படித்தான்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை சித்ரா. ரஜினியுடன் ஊர்க்காவலன், பொண்டாட்டி ராஜ்ஜியம் உள்பட பல படங்களில் அவர் நடித்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமாரின் ‘சேரன் பாண்டியன்’ படத்தில் நடிகர் சரத்குமாரின் தங்கையாக நடித்துள்ளார்.

நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்து பிரபலமடைந்ததால் அதன்பின் ‘நல்லெண்ணெய் சித்ரா’ என அழைக்கப்பட்டார். இவர் கடைசியாக 2020ஆம் ஆண்டு வெளியான ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ என்ற படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை சாலிகிராமத்திலுள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் காலமானார். அவரது உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திரை உலகை சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகை சித்ரா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிப்படங்களில் நடித்துள்ளார். கேரளாவின் கொச்சியில் பிறந்த இவர் முதன்முறையாக மலையாளப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

மலையாளத்தில் மட்டும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், மொத்தமாக 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஹிந்தியிலும் 2 படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி சில தொலைகாட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

cheran-pandiyan-chitra
cheran-pandiyan-chitra

நடிகை சித்ராவுக்கு ஸ்ருதி என்ற மகள் இருக்கிறார். அவர் இந்தாண்டு பிளஸ் டூ முடித்துள்ளார். குழந்தையை வளப்பதற்காகவே பல ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார்.

- Advertisement -

Trending News