வாரிசை பெற்றெடுத்த குஷியில் அமலா பால்.. தமிழ் பெயர் வச்சு அசத்திட்டாங்க! போட்டோஸ்

Amala Paul: நடிகை அமலா பாலுக்கு கடந்த பதினோராம் தேதி குழந்தை பிறந்து இருக்கிறது. இதை ரொம்ப சந்தோசமாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருக்கிறார். அறிமுகமே சர்ச்சையான படம் என்பதாலேயே என்னவோ அமலா பாலை சுற்றி எப்போதுமே சர்ச்சை இருக்கிறது.

தலைவா, காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களின் மூலம் வெற்றி ஹீரோயினாக வளர்ந்து வந்து கொண்டிருந்த நேரத்திலேயே இயக்குனர் ஏஎல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். போன வேகத்திலேயே விவாகரத்து ஆகி மீண்டும் சினிமாவை நம்பி வந்தார்.

ஆனால் அமலா பாலுக்கு சினிமா கை கொடுக்கவில்லை. ஆடை படத்திற்கு பிறகு சினிமாவில் அதிகம் தலை காட்டாத அமலா, ஜெகத் தேசாய் என்பவரை கடந்த நவம்பர் மாதம் காதல் திருமணம் செய்து கொண்டார். கல்யாணம் முடிந்த கையோடு கர்ப்பமாக இருப்பதையும் அறிவித்தார்.

Amala paul baby
Amala paul baby

தொடர்ந்து தன்னுடைய கர்ப்ப கால புகைப்படங்களை பதிவிட்ட அமலா பாலுக்கு ரசிகர்களும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அமலாபாலுக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. இந்த குழந்தைக்கு ‘இலை’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

அமலா தன்னுடைய மகனுக்கு சுத்தமான தமிழ் பெயரை வைத்திருப்பது பெரிய அளவில் வைரலாகி வருகிறது. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அமலா பாலுக்கு அவருடைய குடும்பத்தினர் சர்ப்ரைஸ் கொடுத்த வீடியோவை பகிர்ந்து அமலா தனக்கு வாரிசு வந்ததை தெரிவித்து இருக்கிறார்.

Amala baby
Amala baby

கர்ப்பகாலத்தை அழகாக கொண்டாடிய அமலாபால்

Next Story

- Advertisement -