சினிமா இண்டஸ்ட்ரிலாம் எங்களுக்கு தேவையே இல்லை.. விஜய், அஜித் செய்யும் கீழ்த்தரமான வேலைகள் 

Actor Vijay Vs Ajith: தமிழ் சினிமாவிற்கு சமகாலத்தில் வந்தவர்கள் தான் அஜித் மற்றும் விஜய் இவர்கள் இருவரும். ஆரம்பத்தில் இவர்களுக்குள் போட்டி, பொறாமைஎன எதுவுமே இல்லை. ஆனால் அதை ஆரம்பித்து வைத்தது யார் என்று தெரியவில்லை, அன்று முதல் இன்று வரை திரையரங்குகளில் இவர்கள் படம் வெளியானால் தல, தளபதி  ரசிகர்கள் கலவரம் செய்யாமல் விட மாட்டார்கள்.

ஒரு காலத்தில் இருவரது படங்களும் தனித்தனியாக தான் வெளிவரும்.  ஒரு சமயத்தில் அஜித் நடிப்பதில் சற்று தொய்வு ஏற்படுத்துகிறார். அப்பொழுது அடுத்தடுத்து விஜய் படங்களை ரிலீஸ் செய்து பாக்ஸ் ஆபீசில் நான்தான் கிங் என்று நிரூபிக்கிறார்.

Also Read: கமலஹாசன் வாரிசு அடுத்து நாங்கள் தான் என போட்டி போடும் 4 நடிகர்கள்.. உலக நாயகன் கொடுத்த சர்டிபிகேட்

அப்போது அங்கே ஆரம்பித்த பிரச்சினை தான் இப்போது வரை இவர்களுக்கிடையே மோதல் நிலவி வருகிறது. அஜித், ‘என் படங்களும் நன்றாக தான் ஓடுகிறது, சமமாக ரிலீஸ் பண்ணி பார்க்கலாம்’ என்று ஒரு போட்டியை ஆரம்பிக்கிறார். இப்படித்தான் போட்டி உருவாகி வருகிறது. 

ஆனால் தமிழ்  சினிமா  இண்டஸ்ட்ரியை இவர்கள் வளர்க்க வேண்டும் என்று நினைத்தால், அவர்கள் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் ரசிகர்களின் மத்தியில் அடிதடி கலவரங்களுக்கு வித்திடுகின்றனர். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு தேதியில் படத்தை ரிலீஸ் செய்து லாபத்தை பெற்றுக் கொடுக்கலாம்.

Also Read: விஜய்க்கு அக்கட தேசத்திலிருந்து வந்த கோரிக்கை.. ரஜினியை குறித்து, நஷ்ட ஈடு கேட்ட அவலம்

ஆனால் அப்படி செய்யாமல் ஒரே நாளில் இருவரின் படங்களையும் வெளியிட்டு யார் வசூல் நாயகன் என்பதை நிரூபிக்க பார்க்கின்றனர் .இவர்களுக்கிடையில் ரசிகர்கள் தான் பகடைக்காயாக உருட்டப்படுகின்றனர். இந்த மன நிலைமையுடன் அஜித், விஜய் இருவரும் ரிலீஸ் செய்த படங்கள் தான் துணிவு, வாரிசு.

சினிமா இண்டஸ்ட்ரிலாம் எங்களுக்கு தேவையே இல்லை என்றுதான் இவர்கள் நினைக்கிறார்கள். தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்களை வைத்திருக்கும் அஜித், விஜய் இருவரின் இந்த கீழ்த்தரமான வேலைகள் மூத்த திரை பிரபலங்களை முகம் சுளிக்க வைக்கிறது.

Also Read: ஜெயிலர் வசூலை விஜய்யால் முறியடிக்க வாய்ப்பு இல்லை.. லியோ படத்திற்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்