2024இல் மில்கி ஹீரோஸ் 5 பேர் எடுக்கும் வில்லன் அவதாரம்.. அரவிந்த் சாமிக்கு பதில் பாலிவுட் அமுல் பேபி

Actors play negative role in tamil films: நம்பியார் எம்ஜிஆரின் கிளாசிக் டயலாக் ஒன்று “மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?” என்று  நம்பியார் கேட்க “சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்” என்பார் எம்ஜிஆர்.  மோதும் கதாபாத்திரங்கள் பெரிய ஆளுமைகளாக இருந்தால் மட்டுமே படத்தின் சுவாரசியத்திற்கு குறைவிருக்காது.  இதனை தற்போது சரியாக பயன்படுத்தி வருகின்றனர்   இளம் இயக்குனர்கள்.

2024 முன்னணி நடிகர்களின் படங்கள் திரையில் மோத உள்ளன. படத்திலும் வெயிட்டான வில்லன்களையே பிக்ஸ் செய்து உள்ளனர் இயக்குனர்கள். இந்த வில்லன்கள் அனைவரும் மக்களின் பேவரைட் ஆன டாப் ஸ்டார் நடிகர்கள் என்பது கூடுதல் செய்தி.

விக்ரம்: ஜெயிலரின் வெற்றிக்குப் பின் ரஜினியின் “தலைவர் 170” ஞானவேல் இயக்கத்தில் ரெடியாகி வருகிறது. இதில் வில்லனாக விக்ரம், அர்ஜுன் மற்றும் நானி என்ற பெயர்கள் அடிபட்ட நிலையில் 50 கோடி கொடுத்தாவது விக்ரமை லாக் செய்ய வேண்டும் என்று பட குழுவினர் அவரை சுற்றி வருகின்றனர். ஏற்கனவே ராவணன், இருமுகன் போன்ற படங்களில் விக்ரம் ஹீரோவே மிஞ்சும் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: 40 சதவீத படபிடிப்போடு ஒதுங்கிக் கொண்ட அஜித்.. ஹிட் படத்திற்கு உயிரை கொடுத்து நடித்த விக்ரம்

பாபி தியோல்:  சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் வெளிவர இருக்கும் கங்குவா பல மொழிகளில் தயாராகி வருகிறது. இதில் வில்லனாக நடிக்கும் பாபி தியோல் பாலிவுட் நடிகர் மட்டுமின்றி மறைந்த ஹிந்தி நடிகர் தர்மேந்திராவின் மகன் ஆவார். கங்குவாவின் படப்பிடிப்புக்கு பின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர் சிறுத்தை சிவா மற்றும் சூர்யாவை, பழகுவதற்கு இனிமையானவர்கள். சூர்யா அற்புதமான அர்ப்பணிப்பு உள்ள நடிகர் என்று புகழ்ந்து தள்ளி உள்ளாராம். தமிழன் எப்போதும் இனியவன் தானே.

அபிஷேக் பச்சன்: மோகன் ராஜா ஜெயம் ரவி நயன்தாரா கூட்டணியில் தனி ஒருவன் 2 படமாக்க திட்டமிட்டுள்ளனர். தனி ஒருவனில்  நாயகனுக்கும் கூடுதலாக  ஸ்டைலிஷ் வில்லனாக அரவிந்த் சாமிக்கு அழுத்தம் கொடுத்திருந்தார் இயக்குனர். அதில் அரவிந்த் சாமி ஹிஸ்டரியை க்ளோஸ் செய்து விட்டு இரண்டாவது பாகத்தில் அபிஷேக்  பச்சனை வில்லனாக களம் இறக்குகிறார் ராஜா. “எதிரி தான் உன்னை தேடி வருவான்” என்று ரசிகர்களுக்கு ஒன் லைன் கொடுத்து அபிஷேக் பச்சன் பற்றி எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறார் இயக்குனர்.

மோகன்:  80, 90களில் உலக நாயகன் கமலுக்கு இணையாக அதிகப் பெண் ரசிகர்களை கொண்டிருந்த மைக் மோகன் நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் 68 யில் வில்லனாக ரீஎன்ட்ரி கொடுக்கிறார்.  வெங்கட் பிரபு  இயக்கும் இப்படத்தில் இரண்டு வில்லன்கள் உள்ளதாகவும் ஒன்று மைக் மோகன் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

ராகவா லாரன்ஸ்:  சூப்பர் ஸ்டாரின் சிபாரிசு கடிதத்தோடு திரை பயணத்தை ஆரம்பித்தவர் ராகவா லாரன்ஸ். தனது கடின முயற்சியால் நடிகனாக உயர்ந்த இவர் தற்போது  171 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்க உள்ள தலைவர் 171  இல் வில்லனாக அவதாரம் எடுக்க உள்ளார்.  விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி கேரக்டரில் முதலில் ராகவா லாரன்சைதான் அணுகி உள்ளாராம் லோகேஷ், கால் சீட் பிரச்சனையால் அது இயலாமல் போகவே தற்போது தலைவருடன் ஜோடி சேர்ந்து உள்ளார் லாரன்ஸ்.

Also read: 2023 இல் வசூலில் 600 கோடி கடந்து சாதனை படைத்த 5 படங்கள்.. ஜெயிலரை மிஞ்சிய பதான்!