எம்ஜிஆர், சிவாஜியின் சாதனையை முறியடித்த அடுத்த தலைமுறை நடிகர்.. புது ட்ரெண்டை உருவாக்கிய ஆல்-ரவுண்டர்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் எம்.ஜி.ஆர் அவர்களின் திரைப்படங்கள் 100 நாட்களை கடந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது. இதில் ஒரு சில திரைப்படங்கள் கோடிக்கணக்கில் வசூலையும் குவித்தது என்று சொல்லலாம்.

அந்த வகையில் இவர்கள் இருவரின் காலத்திற்குப் பின்பு உலக நாயகன் கமலஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களாக வலம் வந்தனர். இதில் முக்கியமாக உலக நாயகன் கமலஹாசனின் பல திரைப்படங்கள் திரையரங்குகளில் 100 நாட்களையும் தாண்டி ஓடின.

Also Read :  70, 80களில் கோடிகளை வசூலித்த முதல் 5 தமிழ் படங்கள்.. தலைகால் புரியாமல் ஹீரோக்கள் போட்ட ஆட்டம்

அதில் முக்கியமாக சிவாஜி கணேசன் மற்றும் எம்ஜிஆர் சாதனையை முறியடிக்கும் வகையில் கமலஹாசனின் சகலகலா வல்லவன் திரைப்படம், கிட்டத்தட்ட 53 நாட்கள் திரையரங்கில் ஹவுஸ்புல்லாக ஓடியது.. இயக்குனர் முத்துராமன் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருப்பார்.

இத்திரைப்படம் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட இதர மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு மற்ற மாநிலங்களில் 8 திரையரங்குகளுக்கு மேல் 175 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது. அதேபோல தமிழகத்தில் கிட்டத்தட்ட 30 திரையரங்குகளில் சகலகலா வல்லவன் திரைப்படம் திரையிடப்பட்டு 100 நாட்களைக் கடந்து 3 கோடி ரூபாய்க்கு மேல் வரை வசூலை அள்ளி குவித்தது.

Also Read : 80-களில் கமலஹாசன் செய்த சாதனை.. இதுவரை யாராலும் முறியடிக்க முடியவில்லை

இதேபோல தமிழ் சினிமாவில் பெண்களையும் குடும்பத்தையும் மையப்படுத்தி பல திரைப்படங்களில் இயக்கி,நடித்த இயக்குனர் பாக்யராஜின் முந்தானை முடிச்சு திரைப்படம் கிட்டத்தட்ட 21 திரையரங்குகளை 100 நாட்களுக்கு மேலாகவும்,அதில் 9 திரையரங்குகளில் 175 நாட்களையும் கடந்து வெற்றிகரமாக ஓடியது.

வெறும் 3.30 லட்சம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 4 கோடி வரை வசூலை அள்ளி குவித்தது.இப்படி எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி அவர்களின் சாதனையை முறியடித்து பாக்கியராஜும் கமல்ஹாசனும் தங்களது படங்களில் கோடி கணக்கில் வசூலை கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கே உண்டான பாணியில் பாக்யராஜ் பல சாதனைகளைப் படைத்தார் எம்ஜிஆரின் செல்லப்பிள்ளையாகவும் திகழ்ந்தார்

Also Read : கெஞ்சி கதறியும் இரக்கம் காட்டாத கமல்.. பெரும் நஷ்டத்தை சந்தித்த விவேக்

Next Story

- Advertisement -