3 டசன் படங்களில் இத்தனை ஹிட் தானா.? தமிழ் சினிமாவையே தூக்கி நிறுத்துவேன் என்று கூவி திரியும் விஷால்

Vishal: சண்டக்கோழி திரைப்படத்தின் மூலம் பயங்கர பேமஸான நடிகர் விஷால். சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது சாதாரணம் கிடையாது. அப்படி ஒரு வேல வாய்ப்புக்கு போராடி இருந்தால் தெரிந்து இருக்கும் கஷ்டம். ஆனால் இவருக்கு ஈஸியாகவே கிடைத்து விட்டது. ஏற்கனவே விஷாலின் அப்பாவும், அண்ணனும் சினிமா துறையை சேர்ந்தவர்கள். அதன் மூலமாகவே சினிமாக்குள் வந்துவிட்டார், அதனால் தான் இவ்வளவு ஆட்டம்.

காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் ரீமாசென் கூட்டணியில் வெளியான செல்லமே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அத்திரைப்படம் அவருக்கு வெற்றி ஆக அமைந்தது. பிறகு அதனைத் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது, வரிசையாக நடித்தும் வந்தார். தற்போது வெளியாக உள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் வரை மொத்தமாகவே 35 படங்கள் தான் நடித்திருப்பார்.

Also Read:எதுக்குடா வம்பு, நம்பர் நடிகைக்கு லிப் கிஸ் கொடுக்க மறுத்த ஹீரோ.. ஹிட்டான ரொமான்டிக் படம்

என்னதான் 35 படங்கள் நடித்து இருந்தாலும் கூட, அனைத்துமே வெற்றியை தேடிதந்தனவா என்றால், தரவில்லை. விரல் விட்டு என்னும் அளவில் வெறும் பத்து திரைப்படங்கள் மட்டுமே வெற்றி படமாக அமைந்தது. அதுவும் எதிர்பாக்கும் அளவுக்கு மாபெரும் வெற்றியெல்லாம் கிடையாது, சாதாரண வெற்றி தான். இப்படி இருக்கும் போதே இவருக்கு வாய் கொழுப்பு அதிகம் இருக்கிறது.

வெறும் பத்து படங்களில் வெற்றி கொடுத்துட்டு என்னவோ தான் தமிழ் சினிமாவவில் பெரிய நடிகர் என்று பேசுவார். பிறகு இவர்தான் தமிழ் சினிமாவையே காப்பாற்றி, தூக்கி நிறுத்த வந்த நடிகர் என தற்பெருமை பேசிக் கொள்வதில் இவரை அடிச்சுக்க யாருமே கிடையாது. அது மட்டும் இல்லாம இவர் கீழே தான் தமிழ் சினிமாவே இருக்கின்றது என்றும் கற்பனையிலும் மெதந்து கொண்டு இருக்கிறார்.

Also Read: லியோ படத்துக்கு வச்ச பெரிய ஆப்பு.. வசூலை தடுக்க நாலா பக்கமும் நடக்கும் சதி

இந்த மாதிரி தன்னைத்தானே பெருமையா பேசியும், புகழ்ந்து கொள்வதால் தான் இவர் என்ன செய்தாலும் அது தவறாக போய் முடிகிறது. இதுக்கு மேலயும் இவரு நல்ல பெயர் வாங்கணும் என நினைத்தால் திரைப்படங்களில் நடித்து அது வெற்றி பெறும் வகையில் இருக்க வேண்டும். அதில் இருந்து தான் தனக்கென ஒரு நல்ல பெயரை எடுக்க வேண்டும். அதற்கு பிறகு தான் அடுத்தடுத்த செயல்களிலும் ஈடுபட முடியும்.

இதெல்லாம் நடக்குமா நடக்காதா என்று மார்க் ஆண்டனி திரைப்படத்தில் தான் வெயிட் பண்ணி பாக்க வேண்டும். அதுவுமே எஸ் ஜே சூர்யா படமாகவே பல ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. இது திரைப்படமும் போச்சு என்றல், வேற என்ன தான் நல்லது செய்து பெயர் எடுக்கப் போகிறார் என்று சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பலரும் எதிர்பார்த்துக் கொண்டு காத்திருக்கின்றனர்.

Also Read:முதலிரவு காட்சியில் விஷாலை கணித்த நடிகை.. இப்ப வர பருப்பு வேகாத கொடுமை

இவர் நடித்து ஹிட்டான 10 திரைப்படங்கள் செல்லமே, சண்டைக்கோழி, திமிரு, தாமிரபரணி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், பூஜை, மருது, துப்பறிவாளன், இரும்புத்திரை ஆகும்.

- Advertisement -