நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விஜயகுமாரின் பேத்தி டாக்டர் தியா.. வைரல் போட்டோஸ்

Diya Vijayakumar: விஜயகுமார் வீட்டுப் பெண்கள் அத்தனை பேருமே கொள்ளை அழகு தான். அதிலும் அவருடைய மூத்த பேத்தி தியாவை பேரழகி என்றே சொல்லலாம். நடிகர் விஜயகுமார் வீட்டில் இருந்து சினிமா பக்கம் தலை காட்டாதவர் என்றால் அது அவருடைய இரண்டாவது மகள் அனிதா தான்.

இவர் டாக்டருக்கு படித்து அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள்தான் தியா. அம்மாவை போலவே தியாவும் மருத்துவராகி விட்டார். கடந்த சில வருடங்களுக்கு முன் விஜயகுமார் குடும்ப புகைப்படத்தில் இவர் இருப்பது தமிழ் சினிமா ரசிகர்களால் அதிக கவனம் பெற்றது.

விஜயகுமார் வீட்டிலிருந்து அடுத்த ஹீரோயின் ரெடி என்று கூட சொல்லப்பட்டது. ஆனால் சினிமா பக்கம் வராமல் உஷாராக கல்யாணம் செய்து கொண்டார் தியா. இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் தான் திருமணம் நடைபெற்றது. ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் கூடி இந்த தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தது.

டாக்டராக இருந்தாலும் தியா அவ்வப்போது போட்டோ சூட்டுகள் நடத்தி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிடுவது உண்டு. அப்படி சமீபத்தில் அவர் பதிவிட்ட புகைப்படங்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது.

விஜயகுமார் வீட்டில் வனிதாவை தவிர மற்ற பிள்ளைகள் அத்தனை பேருமே ஒன்றாக கூடி சந்தோஷமாக பொழுதை கழிக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாவது உண்டு. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுக் கொண்டே இருக்கிறது.

வைரல் போட்டோஸ்

Diya
Diya
Diya
Diya

Next Story

- Advertisement -