தப்பு கணக்கு போட்ட விஜய் சேதுபதி.. தெளிவில்லாமல் எடுத்த முடிவால் இழந்த பழக்கவழக்கம்

Actor Vijay Sethupathi taken by Wrong decision: தமிழில் மட்டுமல்லாமல் டோலிவுட், பாலிவுட் என வெரைட்டி காட்டிக் கொண்டிருக்கும் நடிகர் தான் விஜய் சேதுபதி. இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் வயதான மனிதர், வில்லன், திருநங்கை, குணச்சித்திர கேரக்டர் என, எது கொடுத்தாலும் அதில் நடிக்க கூடியவர்.

விஜய் சேதுபதி இதுவரை 80 படங்களில் நடித்திருக்கிறார். இதில் 30 படங்கள் கும்பலோடு கும்பலாக கோவிந்தா போட்டு இருக்கிறார். ஆனால் அதன் பின்பு தான் விஜய் சேதுபதி பக்கம் காற்று வீசியதும் 20 படங்களுக்கு மேல் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இதில் எல்லாம் பெயர் வாங்காத விஜய் சேதுபதி கேமியோ கதாபாத்திரங்களிலும், வில்லனாகவும் நடித்ததில் தான் அவருக்கு பெரும் புகழ் கிடைத்தது.

அதிலும் குறிப்பிட்டு சொன்னால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விக்ரம் படத்தில் சந்தனம் என்ற வில்லன் கேரக்டரில் விஜய் சேதுபதி தன்னுடைய மிரட்டலான நடிப்பை காட்டினார். ஆனால் இப்பொழுது இந்த மாதிரியான ரோலில் நடிக்க முடியாது, இனிமேல் என்னை கூப்பிடாதீர்கள் என்று டாப் இயக்குனர்களிடம் விஜய் சேதுபதி கெத்து காட்டுகிறார்.

Also Read: ஹீரோயின் ஓகே சொல்லியும் லிப்லாக்குக்கு நோ சொன்ன 5 ஹீரோக்கள்.. விஜய் சேதுபதி கூறிய லாஜிக்

விஜய் சேதுபதி எடுத்த தவறான முடிவு

இப்படி தெளிவே இல்லாமல் எடுத்த முடிவால் அவருக்கு சினிமாவில் இருந்த நல்ல பழக்க வழக்கத்தை எல்லாம் கெடுத்து கொள்கிறார். இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என முடிவெடுத்து, விஜய் சேதுபதி தன்னுடைய தலையிலேயே மண்ணை வாரி போட்டுக் கொள்கிறார். இது விஜய் சேதுபதி எடுத்த மிக தவறான முடிவு, ஏனெனில் ரசிகர்களும் அவரை வெரைட்டி நடிகராகவே தான் பார்க்க விரும்புகின்றனர்.

இதுவரை விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த 5 படங்கள் தான் ஹிட் ஆகியிருக்கிறது. இப்போது மறுபடியும் ஹீரோவாக நடிக்கும் விஜய் சேதுபதியின் படங்கள் ரசிகர்களை சென்றடைய போவதில்லை. அவருடைய கேரிருக்கே பெருத்த அடி விழுகப்போகிறது என்று அவரின் முடிவை கேட்ட பலரும் ஆதங்கப்படுகின்றனர்.

Also Read: கமலுக்கு வைக்கப்பட்ட செக்.. சூதனமாக நடந்து கொண்ட வாரிசுகள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்