வடிவேலுவை மட்டுமே நம்பியிருந்த பிரபலம்.. அவர் இல்லாததால் சோற்றுக்கே கஷ்டப்படும் நிலைமை

தமிழ்சினிமாவில் வடிவேலுவை பற்றி ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும் தன்னை நம்பி இருப்பவர்களை அவர் எப்போதுமே கைவிட்டதில்லை என பலரும் பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளனர்.

விவேக் வடிவேலு இருவருமே தங்களுடைய நெருக்கமான பலருக்கும் தாங்கள் நடிக்கும் படங்களில் வாய்ப்பு வாங்கி கொடுத்து அவர்களின் வாழ்வாதாரங்களை உயர்த்த வழிவகை செய்துள்ளனர்.

ஆனால் கடந்த பத்து வருடங்களாக வடிவேலு சினிமாவில் இல்லை. அவ்வப்போது ஒரு சில படங்களில் நடித்தாலும் பெரிய அளவு அவரால் தொடர்ச்சியாக சினிமாவில் தலைகாட்ட முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.

அப்படி வடிவேலு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நாட்களில் அவருக்கென ஒரு கூட்டம் இருந்தது. வடிவேலு நடிக்கும் அனைத்து படங்களிலும் அவர்களையும் அதிகமாக காணலாம். அப்படி ஒருவர்தான் வெங்கல்ராவ்.

மொட்டை தலையுடன் வடிவேலுவுடன் இவர் செய்யும் காமெடி காட்சிகள் அனைத்துமே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கவும். அப்படியே அவர்களது ஜோடி சினிமாவில் சூப்பர் ஹிட் அடித்தது.

சமீபகாலமாக வடிவேலு சினிமாவில் இல்லாததால் வெங்கல்ராவ் என்பவருக்கு சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லையாம். வடிவேலு இருந்தால் அவரே தனக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்து விடுவார் எனவும், அவர் இல்லாததால் இன்னும் வாடகை வீட்டில் சோற்றுக்கே கஷ்டப்படும் நிலைமைதான் எனவும் சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டு அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளார்.

vengalrao-cinemapettai
vengalrao-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்