கடும் வயிற்றெரிச்சலில் சூர்யா.. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலையே

சூர்யா தற்போது பாலாவின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். அது தவிர விக்ரம், ராக்கெட்டரி போன்ற திரைப்படங்களிலும் கௌரவத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். மேலும் அவர் நடிப்பில் சில திரைப்படங்கள் உருவாக இருக்கிறது.

இதனால் சூர்யா தற்போது கோலிவுட்டில் பிஸியான நாயகனாக வலம் வருகிறார். இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் யானை திரைப்படத்தால் சூர்யா கடும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் யானை படத்திற்கு பல பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இந்த திரைப்படத்தின் கதையை முதன் முதலில் ஹரி சூர்யாவிடம் தான் கூறினாராம். சூர்யா ஹரி கூட்டணியில் ஆறு, சிங்கம் போன்ற பல திரைப்படங்கள் வெளியாகி வெற்றிவாகை சூடி இருக்கிறது. அதிலும் சிங்கம் திரைப்படம் மூன்று பாகங்களாக வெளிவந்து சக்கை போடு போட்டது.

அதன் பிறகு அவர்கள் இருவரின் கூட்டணி வெற்றி கூட்டணியாக பார்க்கப்படுகிறது. அதனால்தான் ஹரி யானை திரைப்படத்தின் கதையை முதலில் சூர்யாவுக்கு கூறி இருக்கிறார். ஆனால் சூர்யா அந்த சமயத்தில் பல திரைப்படங்களில் பிசியாக இருப்பதாக கூறி அந்த திரைப்படத்தை தட்டிக் கழித்து இருக்கிறார்.

அதன் பிறகு தான் ஹரி தன்னுடைய மனைவியின் சகோதரரான அருண் விஜய்யை அந்த திரைப்படத்திற்கு ஹீரோவாக தேர்ந்தெடுத்துள்ளார். இவர்களின் கூட்டணியில் யானை திரைப்படமும் உருவாகி தற்போது ரிலீஸ் ஆகிவிட்டது. இப்படம் வெளியாவதற்கு முன்பு சில தடங்கல்களை சந்தித்தாலும் தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதைப் பார்த்த சூர்யா தற்போது மிகுந்த வருத்தத்தில் இருக்கிறாராம். ஒருவேளை இந்த திரைப்படத்தில் நாம் நடித்து இருந்தால் நமக்கு இது ஒரு வெற்றி திரைப்படமாக அமைந்திருக்கும் என்று அவர் பயங்கர வயிற்றெரிச்சலில் இருப்பதாக திரை உலகில் பேசப்பட்டு வருகிறது.

Next Story

- Advertisement -