விஜய் பாணியை பின்பற்றும் சூர்யா.. அடுத்தடுத்த நடிகர்களின் முடிவால் ஸ்தம்பிக்கும் சினிமா

பீஸ்ட் படத்திற்கு பிறகு விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு இந்த படத்தை தயாரிக்கிறார். இதில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு தெலுங்கு திரையுலகில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. விஜய் முதல் முறையாக நேரடி தெலுங்கு திரைப்படத்தில் நடிப்பதால் அவருடைய ரசிகர்கள் இந்த படத்தை காண மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் சூர்யாவும், விஜய் போன்று தெலுங்கு தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு படம் நடிப்பதற்கு சம்மதித்துள்ளார். தற்போது பாலாவின் இயக்கத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தை சாஹோ, ராதேஷ்யாம் உள்ளிட்ட பல தெலுங்குத் திரைப்படங்களை தயாரித்த யு வி கிரியேஷன்ஸ் தயாரிக்க இருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படம் அடுத்த வருடத்தில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது.

தற்போது இந்த தகவல் தான் சோஷியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. மேலும் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் சூர்யா, விஜய்யை போன்று நேரடி தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

சமீபகாலமாக தமிழ் நடிகர்கள் நேரடி தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பதற்கு அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகியோரும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

முன்னணி நடிகர்களின் இந்த முடிவால் தமிழ் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் நிலைமைதான் மோசமாக இருக்கிறது. இப்படி அனைவரும் தெலுங்கு திரையுலகை குறி வைப்பதால் தமிழ் திரையுலகம் ஸ்தம்பித்துப் போய் இருக்கிறது. பணம், புகழ் போன்றவற்றிற்காக முன்னணி நடிகர்கள் தற்போது தெலுங்கு பக்கம் சாய்ந்து வருவது மூத்த தயாரிப்பாளர்களுக்கு வேதனையை கொடுத்துள்ளது.

Next Story

- Advertisement -