வானத்தைப்போல சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ஸ்ரீகுமார்.. இனி இவருக்காக பார்க்கலாம்

சன் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்களின் ஆதரவை பெற்று டிஆர்பி யில் முன்னணியில் இருந்து வருகிறது. அப்படி அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் சீரியல் வானத்தைப் போல.

இந்த சீரியலில் அண்ணனாக நடிகர் தமன் குமார், தங்கையாக நடிகை ஸ்வேதாவும் நடித்து வருகின்றனர். அண்ணன் மீது அதிக பாசத்தை பொழியும் தங்கை கேரக்டரில் நடித்து வந்த ஸ்வேதா சில காரணங்களால் அந்த சீரியலை விட்டு விலகுவதாக அறிவித்தார்.

இதனால் ரசிகர்கள் பலரும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். தற்போது ஸ்வேதாவுக்கு பதிலாக துளசி கதாபாத்திரத்தில் சீரியல் நடிகை மான்யா நடிக்கிறார். அடுத்ததாக அனைவருக்கும் அதிர்ச்சியூட்டும் விதமாக அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் தமன் குமாரும் சீரியலை விட்டு விலகி உள்ளார்.

இந்த செய்தியால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர். சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இருவருமே அடுத்தடுத்து சீரியலில் இருந்து விலகியுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது தமன் குமார் நடித்த கேரக்டரில் அடுத்தது யார் நடிப்பார்கள் என்ற கேள்வி மக்களிடையே எழுந்து வருகிறது.

சின்னத்திரையில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் ஸ்ரீ குமார் தற்போது வானத்தைப்போல சீரியலில் சின்ராசு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான பொம்மலாட்டம் என்ற சீரியலில் நடித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் நடிகர் சஞ்சீவுக்கு பதில் இவர் நடித்திருந்தார். அந்த சீரியல் முடிவு பெற்றதை அடுத்து ஸ்ரீகுமார் தற்போது மீண்டும் சன் டிவி வானத்தைப் போல சீரியலில் நடிக்கிறார். புதிய அண்ணன் தங்கை நடிக்கும் வானத்தைப் போல சீரியலின் அடுத்த எபிசோட் விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.