இப்போ சிம்பு மொத்தமா இவர் கண்ட்ரோலில் தான்.. பிரியாணி முதல் ஷூட்டிங் வரை சூப்பர் ஸ்டார்க்கு அடிப்போடும் ரகசியம்

நடிகர் சிம்புவுக்கு சமீபத்திய காலம் தொட்டது எல்லாம் துலங்கும் காலமாகவே உள்ளது. கடுமையான உழைப்பை போட்டு விட்ட இடத்தை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று ரொம்பவும் முயற்சி செய்து வருகிறார். நல்ல கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடித்து அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து அவருடைய ரசிகர்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.

கிட்டத்தட்ட சினிமாவில் இருந்து ரெட் கார்டு கொடுத்து சிம்புவை வெளியே அனுப்பும் நிலையில் நிறைய தயாரிப்பாளர்கள் முடிவு எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் சிம்பு சட்டென தன்னுடைய எடையை 30 கிலோ வரை குறைத்து ஈஸ்வரன் படத்தில் நடித்தார். அதன் பின்னர் அவர் நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு, சமீபத்திய ரிலீசான பத்து தல போன்ற படங்களில் பட்டையை கிளப்பி விட்டார்.

Also Read:லோகேஷுக்கு ஸ்கெட்ச் போட்ட சிம்பு.. பத்து தல செய்தியாளர் சந்திப்பில் வீசிய வலை

சிம்பு இப்படி அடுத்தடுத்து வெற்றிகளை கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் அவருடைய அப்பா டி.ராஜேந்தருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. சென்னையில் சிகிச்சை பார்த்துக் கொண்டிருந்த அவர் அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். உடல் நலம் தேறி இந்தியா திரும்பி இருந்தாலும் அவரால் தற்போது முன்பை போல பல விஷயங்களில் ஆக்டிவாக இருக்க முடியவில்லை.

தற்போது சிம்புவின் அப்பாவின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், முழுக்க முழுக்க சிம்புவின் வலது கையாக இருந்து செயல்படுபவர் டி.ஆரின் அண்ணன் வாசு தானாம் . சிம்பு அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை இவரை கலந்து ஆலோசித்து விட்டு தான் செய்கிறாராம். அந்த அளவுக்கு இவர்கள் இருவருக்கும் நல்ல நெருக்கம் இருக்கிறதாம் .

Also Read:கொள்கையை மாற்றிக் கொண்ட சிம்பு.. தயாரிப்பாளருக்கு வைத்த வேண்டுகோள்

சமீபத்தில் சிம்பு பத்து தல படத்தின் வெற்றி கொண்டாட்டமாக தன்னுடைய ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு பிரியாணி விருந்து வழங்கினார். தன் கைகளாலேயே ரசிகர்களுக்கு பிரியாணி பரிமாறினார் சிம்பு. ரசிகர்களை நேரில் சந்திப்பது, பிரியாணி விருந்து போன்ற அத்தனை ஐடியாக்களையும் சிம்புவுக்கு கொடுத்தது இந்த வாசுதானாம் .

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தளபதி விஜய் போன்றவர்கள் தங்களுடைய ரசிகர்களை நேரில் சந்தித்து இதுபோன்று உணவு விருந்துகளை வைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து தற்போது சிம்புவும் இதை தொடங்கி இருக்கிறார். விட்ட இடத்தை பிடிப்பதோடு பெரிய சூப்பர் ஸ்டார் ஆகி விட வேண்டும் என்பதுதான் சிம்புவின் அடுத்த கட்ட முயற்சி. இதற்கு முழுக்க முழுக்க டி. ஆரின் அண்ணனும் சப்போர்ட் செய்து வருகிறாராம்.

Also Read:ரஜினியின் கதையில் நடிக்கும் சிம்பு.. கமலுக்காக பல கோடி சம்பளத்தை குறைத்துக் கொண்ட சம்பவம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்