திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

விடுதலை படத்தின் ரகசியத்தை உளறிய சேத்தன்.. வெகுளியாய் மொத்த உண்மையையும் உடைத்த ஓசி

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது விடுதலை திரைப்படம். இந்த படத்திற்கு முழுக்க முழுக்க பாசிட்டிவ் விமர்சனங்கள் தான் இதுவரை கிடைத்திருக்கின்றன. வெற்றி மாறனின் நான்கு வருட காத்திருப்பிற்கு கை மேல் பலன் கிடைத்திருக்கிறது. மேலும் வசூலிலும் ஜெயித்திருக்கிறது.

நடிகர் சூரி யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சினிமா கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் சூரியின் நடிப்பிற்கு பாராட்டு மலையை பொழிந்து வருகின்றனர். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி விடுதலை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

Also Read:விடுதலை ஒரு டப்பா படம்.. முயற்சி இல்லாத இயக்குனர் என கோபத்தில் பேசிய பிரபலம்.!

மேலும் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். பிரபல சின்னத்திரை நடிகர் சேத்தன் ஓசி என்னும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் விடுதலை படத்தின் முக்கியமான காட்சி ஒன்று எப்படி படமாக்கப்பட்டது என்பதை வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்.

விடுதலை படத்தில் பெருமாள் வாத்தியாரை பிடிக்க திட்டமிடும் போலீஸ்காரர்கள் அந்த ஊரில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களை தனித்தனியாக சித்திரவதை செய்வார்கள். அதில் பெண்களை எல்லாம் ஆடைகள் இல்லாமல் நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்வது போல் காட்டப்பட்டு இருக்கும். இந்த காட்சி ரசிகர்கள் இடையே கொஞ்சம் நெருடலாகவே இருந்தது.

Also Read:சூரியின் நடிப்பில் மிரட்டிய விடுதலை.. ரெண்டு மணி நேரத்தில் ஹார்ட் பீட்டை எகிற செய்த கதைக்களம்

அது பற்றி ரசிகர்களுக்கு விளக்கம் அளித்த சேத்தன் அந்த காட்சியை எப்படி ஹேண்டில் செய்ய வேண்டுமோ அப்படி வெற்றிமாறன் செய்தார் என்று சொல்லி இருக்கிறார். அதில் பெண்களுக்கு ஸ்கின் கலர் ஆடை கொடுக்கப்பட்டதாகவும், மேலும் காட்சி எடுக்கப்படும் அறைக்குள் சம்பந்தப்பட்டவர்களை தவிர வேறு யாரையும் உள்ளே விடவில்லை என்றும் சொல்லி இருந்தார்.

இந்த படத்தில் கௌதம் மேனன் மற்றும் சேத்தன் இருவரும் இரக்கமில்லாத போலீஸ் அதிகாரிகளாக வருவார்கள் இந்த படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் இவர்களுடைய கேரக்டரை திட்டியது மட்டும் இல்லாமல் சேத்தனின் மனைவி மற்றும் மகளும் அவரை திட்டி தீர்த்து விட்டதாக பேட்டியில் சொல்லி இருக்கிறார். இவர் ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

Also Read:விடுதலை பார்ட் 2-வில் ஹீரோ சூரி இல்ல.. கிளைமேக்ஸை வேற லெவலில் செதுக்கியிருக்கும் வெற்றிமாறன்

- Advertisement -

Trending News