புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பொறுப்பில்லாமல் நடந்து கொண்ட சரத்குமார்.. பணம் பாதாளம் வரை பாயுது

சினிமாவிலும் அரசியலிலும் ஆர்வம் காட்டிக்கொண்டிருக்கும் நடிகர் சரத்குமார் 30 வருடங்களாக கதாநாயகன், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பு ரசிகர்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன.

தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சரத்குமார் சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த அளவிற்கு சமுதாயத்தில் நடக்கும் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். ஆனால் இவர் தற்போது செய்திருக்கும் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீபத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் மறுபடியும் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தோற்றுப் பரவலால் பாதிக்கின்றனர் என்பதற்காக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி நிறுவனராக உள்ளார் சரத்குமார். தற்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் சில சினிமா பிரபலங்கள் நடித்துள்ளார். இந்த சர்ச்சைக்குரிய விளம்பரத்தில் தற்போது சரத்குமார் நடித்திருப்பது பல தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல பேர் விளையாடி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். முன்பு எப்படி லாட்டரி சீட்டு அனைத்து வகையான மக்களின் உழைப்பை சுரண்டி அவர்களை வறுமையிலும், கடன் தொல்லையிலும் ஆக்கியது போல் தற்போது நவீன கால வடிவில் வந்திருக்கும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு பல இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை கெடுத்துக் கொள்கின்றனர் .

இதனால் சிலர் உயிரையும் மாய்த்துக் கொள்கின்றனர். இதுபோன்ற விளம்பரத்தில் நடிகராகவும் அரசியல்வாதியாக முன்னாள் எம்பி எம்எல்ஏ பதவி வகித்த சரத்குமார் ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடித்தது தவறு வெடித்து என கூறிவருகின்றனர். பணம் பாதாளம் வரை பாய்கிறது என்பதற்கேற்ப பணத்திற்காக சரத்குமார் சமுதாய அக்கறை இல்லாமல் சரத்குமார் இப்படி செய்திருப்பது சிலருக்கு வருத்தமளிக்கிறது.

- Advertisement -

Trending News