மொத்த சோலியையும் ஒரே மேடையில் முடித்து விட்ட ரோபோ சங்கர்.. நூலிலையில் உயிர்தப்பித்தும் துரத்தும் கெட்ட நேரம்

Actor Robo Shankar: மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஆக இருந்த ரோபோ ஷங்கர் படிப்படியாக முன்னேறி இப்போது டாப் நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இவருக்கு இருந்த குடிப்பழக்கத்தால் உடலை கெடுத்துக் கொண்டு இப்போது ஆளே அடையாளம் தெரியாமல் ஒல்லியாக மாறிவிட்டார். இருப்பினும் தொடர்ந்து சினிமா வாய்ப்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் ரோபோ சங்கர் சமீபத்தில் கலந்து கொண்ட பட பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகையின் முழங்காலை தடவ முடியல என அநாகரிகமாக பேசி வாங்கி கட்டிக் கொண்டார்.

நடிகர் ஆதி ஹீரோவாக நடித்துள்ள பாட்னர் படத்தில் ஆதிக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார். இதில் யோகி பாபு, முனீஸ்காந்த் ரோபோ சங்கர், ஜான் விஜய் உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த மாதம் ரிலீஸ் ஆக உள்ள இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றுள்ளது. அதில் கலந்து கொண்டு பேசிய ரோபோ சங்கர் மேடையில் கதாநாயகி ஹன்சிகாவின் முழங்காலை தடவ முடியல என வருத்தப்பட்டு இருக்கிறார்.

Also Read: ஹன்சிகாவின் காலை தொட முயற்சி செய்த ரோபோ சங்கர்.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட படக்குழு

ரோபோ சங்கருக்கும் ஒரு மகள் இருக்கும் நிலையில், ஹன்சிகாவின் முட்டிக்கு கீழ் கால தடவுற சீனில் தடவ முடியாமல் போனது கஷ்டமா இருக்கு என தெரிவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. பாட்னர் படத்தில் ஹன்சிகா காலை தடவுற மாதிரி ஒரு காட்சி படத்தில் இடம்பெற்றுள்ளது. ஒரு பொருளைத் தேடி முட்டிக்கு கீழ் கால தடவுவதுதான் அந்த சீன். அந்த காட்சியில் நடிக்க வைக்க ஹன்சிகாவை எவ்வளவோ போராடி இருக்கிறார்கள். ஆனால் முடியவில்லை.

இயக்குனரிடம் கூட ரோபோ சங்கர் கெஞ்சி பார்த்திருக்கிறார். அட்லீஸ்ட் கட்ட விரலையாவது தடவிக்கிறேனே என்றும் கூறியிருக்கிறார். ஆனால் ஹன்சிகா முடியவே முடியாதுனு ஸ்டிட்டா சொல்லிட்டாங்க. ஒன்லி ஹீரோ ஆதி மட்டுமே என்னை தொட்டு நடிக்கணும், வேற யாரும் தொடக்கூடாது என ஹன்சிகா சொல்லிட்டாங்க. அப்போதுதான் நினைத்தேன் ஹீரோ ஹீரோ தான். காமெடியன் ஓரமா தான் இருக்கணும் போல என கொச்சையாக பேசி இதெல்லாம் நகைச்சுவைக்கு என்று கூறி பேச்சை முடித்துவிட்டு ரோபோ சங்கர் மேடையில் இருந்து இறங்கினார்.

Also Read: படுதோல்வியை சந்தித்த 5 கேங்ஸ்டர் படங்கள்.. பிளாப் ஆகியும் இரண்டாம் பாகத்திற்கு ஏங்க வைத்த புதுப்பேட்டை

ஹன்சிகாவிற்கு ஓரளவு மட்டுமே தமிழ் தெரியும் என்பதால் ஆதி மேடையில் ரோபோ சங்கர் என்ன சொன்னார் என்பதை ஆங்கிலத்தில் சொல்லி புரிய வைத்தார். உடனே ஹன்சிகாவும் அந்த இடத்திலேயே டென்ஷன் ஆனார். அது மட்டுமல்ல ரோபோ சங்கர் பேசிய இந்த வீடியோ பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. இப்படி  மேடையில் அநாகரிகமாக பேசி தன்னுடைய சினிமா கேரியரையே ஊத்தி மூடி விட்டார். ஏற்கனவே உடல் நலக்குறைவால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ரோபோ சங்கருக்கு இன்னும் கெட்ட நேரம் விடாமல் துரத்துகிறது.

இதை பார்த்து நெட்டிசன்கள் உன்னுடைய மகளிடம் இதே போன்று கேட்பாயா என்று கண்டபடி கழுவி ஊற்றுகின்றனர். சபையின் நாகரீகம் கொஞ்சம் கூட தெரியாத ரோபோ சங்கரை எதற்காக மேடையில் ஏற்றுகிறீர்கள் என்று பட குழுவினரையும் நெட்டிசன்கள் விலாசுகின்றனர். ஏற்கனவே குடித்துவிட்டு உடலில் இருக்கும் பாகங்களை எல்லாம் கெடுத்துக் கொண்ட ரோபோ சங்கர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், இன்னும் வாய்க்கொழுப்பு மட்டும் அடங்காமல் இருக்கிறார் என்று இவருடைய பேச்சை கேட்ட பலரும் கொந்தளிக்கின்றனர்.

Also Read: தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்ட ஹன்சிகா.. யாருக்கும் தெரியாமல் செய்த மட்டமான வேலை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்