அப்பவே விதை போட்டு ஆலமரம் போல் வளர்ந்த பிரசாந்த்.. படமே இல்லா விட்டாலும் அடிச்சுக்க முடியாத சொத்து மதிப்பு

Actor Prashanth: 90 காலகட்டத்தில் இளம் நாயகனாக கலக்கிய பிரசாந்துக்கு ஏராளமான பெண் ரசிகைகள் இருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் விஜய், அஜித்துக்கு நிகராக வந்திருக்க வேண்டிய ஒரு நடிகர் தான் இவர்.

ஒரு காலத்தில் நிற்க கூட நேரமில்லாமல் நடித்து வந்த இவர் இடையில் கொஞ்சம் சறுக்கி விட்டார். இதற்கு முக்கிய காரணம் அவருடைய திருமணம், விவாகரத்து போன்ற பிரச்சனைகள் தான்.

தற்போது விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து வரும் இவருக்கு 51 வயது ஆகிறது. இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வரும் பிரசாந்தின் சொத்து மதிப்பு பற்றி காண்போம்.

தன்னுடைய சொந்த சம்பாத்தியத்தில் இவர் பல சொத்துக்களை வாங்கி போட்டு இருக்கிறார். அது மட்டுமல்லாமல் பல தொழில்களில் முதலீடும் செய்திருக்கிறார்.

கோடிகளுக்கு அதிபதியான பிரசாந்த்

அதில் தி நகரில் இவருக்கு சொந்தமாக 17 மாடிகள் கொண்ட பிரம்மாண்ட கட்டிடம் இருக்கிறது. இதில் தான் ஜோய் ஆலுக்காஸ் கடையும் இயங்கி வருகிறது.

இதன் வாடகை மட்டுமே பல கோடிகள் வரும். அதேபோல் இன்னும் பிற சொத்துக்களின் மூலமாகவும் இவருக்கு வருமானம் வந்து கொண்டிருக்கிறது.

மேலும் சென்னை உட்பட தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் இவருக்கு சொந்தமாக வீடுகள் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் பிஎம்டபிள்யூ உட்பட பல லேட்டஸ்ட் மாடல் கார்களும் இவரிடம் உள்ளது.

இப்படி பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் பிரசாந்திடம் தற்போது 100 கோடி வரை சொத்துக்கள் இருக்கிறது. ஆக மொத்தம் இன்றும் ஆணழகனாக இருக்கும் டாப் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Next Story

- Advertisement -