வடிவேலுடன் இருந்தால் வளர முடியாது என புது ரூட்டை பிடித்த காமெடியன்.. கடைசியில் என்னாச்சு தெரியுமா.?

தமிழ் சினிமாவில் தன் உடல் மொழியாலும், நகைச்சுவையாலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகர் வடிவேலு. இவருடைய நகைச்சுவையை ரசிக்காத ஆட்களே கிடையாது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அறிமுகமானவர்.

இவருடைய வசனங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானது இந்த வசனங்களை கொண்டு பல மீம்ஸ்களும், ட்ரோல்களும் வெளிவந்து நம்மை ரசிக்க வைத்தது. நடிகர் வடிவேலுவுடன் பல துணை காமெடி நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.

அதில் நடிகர் முத்துகாளையும் ஒருவர். சினிமாவில் ஃபைட் மாஸ்டர் ஆக வேண்டும் என்பதே இவருடைய கனவு. 18 வயதிலேயே கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கிய இவர் 20 வயதில் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கராத்தே பயிற்சி வகுப்பும் எடுத்துள்ளார். அதன் பிறகு இவர் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினர்.

இவர் வடிவேலுவுடன் இணைந்து நடித்த பல காட்சிகள் ரசிகர்களை சிரிக்க வைத்தது. அந்தக் காட்சிகளில் இடம்பெறும் வசனங்கள் உதாரணமாக செத்து செத்து விளையாடுவோமா மற்றும் கார்மேகம் திரைப்படத்தில் அம்மே அம்மே என்று வடிவேலுவுக்கு போட்டியாக இவர் கூறும் வசனம் மிகவும் ரகளையாக இருக்கும். இதன் மூலம் பெரும் புகழும் பணமும் அவருக்கு கிடைத்தது.

நடிகர் வடிவேலு சில வருடங்களாக எந்த படங்களிலும் நடிக்காததால் அவருடன் நடித்த நடிகர்களுக்கும் வேறு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. அந்த வரிசையில் நடிகர் முத்துக்களையும் படவாய்ப்புகள் இன்றி இருந்தார். சில வருடங்களுக்கு முன் நடிகர் முத்துகாளை இறந்துவிட்டதாக வதந்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்பொழுது இவர் வடிவேலுவுடன் நடித்தால் வளர முடியாது என்று தனிநகைச்சுவை நடிகராக தன் திறமையை காட்ட முடிவெடுத்துள்ளார். இந்த வருடத்தில் இவர் நடித்து வெளியான பேய் இருக்க பயமேன் திரைப்படம் அந்த அளவிற்கு ரசிகர்களை கவரவில்லை.

அதை தொடர்ந்து இவர் வேறு எந்த திரைப்படத்திலும் இதுவரை நடிக்கவில்லை. வடிவேலும் சில வருடங்களாக படங்களில் நடிக்கவில்லை தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. முத்துக்காளை வடிவேலை விட்டு வெளியேறியதால் வாய்ப்பு கிடைக்காமல் திணறி தான் வருகிறாராம்.

vadivelu-cinemapettai
vadivelu-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்