மீண்டும் நடிப்பில் களமிறங்கும் மைக் மோகன்.. எந்த இயக்குநரின் படத்தில் தெரியுமா

தமிழ் சினிமாவில் வெள்ளி விழா நாயகன் என்று அழைக்கப்படும் பெருமைக்குரியவர் நடிகர் மோகன். சினிமாவில் பல திரைப்படங்களில் மைக் பிடித்து பாட்டு பாடும் கதாபாத்திரத்தில் நடித்ததால் இவர் மைக் மோகன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

அந்த காலத்திலேயே அவர் நடித்த படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. ரஜினி, கமல் போன்ற நடிகர்களின் படங்கள் திரையரங்கில் ஓடுவதைவிட மோகன் நடித்த படங்கள் அதிக நாட்கள் ஓடி வெற்றி கண்டது.

மேலும் அவர் ஒரு வருடத்தில் மட்டும் 17 படங்களில் நடித்து பிசியான நடிகராக வலம் வந்தார். இவர் கடைசியாக தமிழில் சுட்ட பழம் என்ற திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் ரசிகர்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. அதன்பிறகு அவர் தமிழில் எந்த படமும் நடிக்காமல் இருந்தார்.

தற்போது மோகன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக இருக்கும் நடிகர் சாருஹாசனை ஹீரோவாக வைத்து தாதா 87 என்ற படத்தை இயக்கியவர் விஜய் ஸ்ரீ ஜி.

இவரின் இயக்கத்தில் தான் மோகன் மீண்டும் தமிழ் திரையுலகில் தனது அடுத்த இன்னிங்சை தொடங்க இருக்கிறார். மோகன் தமிழில், நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று அடம் பிடித்த காரணத்தால் சில காலம் சினிமா வாய்ப்புகள் இன்றி இருந்தார்.

அதன்பிறகு அவர் கடைசியாக 2016 ல் தெலுங்கில் ஒரு படத்தில் நடித்தார். தற்போது ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க இருக்கிறார். அவர் நடிக்கும் இந்த படத்தை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்