வேட்டையன் டூ ஸ்டார்.. மூன்றே படம் நடித்து கவின் சேர்த்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Kavin networth: நடிகர் கவின் இன்று தன்னுடைய 34 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள். சினிமாவில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் மக்களிடையே ஓரளவுக்கு பரீட்சையமானார்.

இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்த சீரியல் சரவணன் மீனாட்சி. இதில் இவர் நடித்த வேட்டையன் கேரக்டர் பெண் ரசிகைகளால் கொண்டாடப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் பெரிய பெரிய நடிகர்களை விட அதிக செல்வாக்குடன் இருந்தார். அதன் பின்னர் நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்தில் நடிக்கும் வாய்ப்பை அவருக்கு கிடைத்தது.

ஆனால் ஒரு சில பொருளாதார சிக்கல்களால் இந்த படம் ரிலீஸ் ஆக காலதாமதமாக கவின் என்று ஒருவர் இருக்கிறார் என்பதை தமிழ் சினிமா ரசிகர்கள் மறந்து விட்டார்கள். பின்னர் இவருக்கு பிக் பாஸ் சீசன் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஒரு போட்டியாளராக இல்லாமல், சக மனிதனாக இவருக்கு ரசிகர்களிடையே அதிக செல்வாக்கு கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்ததும் கவினுக்கு லிப்ட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

அதைத் தொடர்ந்து இவர் நடித்த டாடா படம் சூப்பர் ஹிட் அடித்தது. தொடர்ந்து இரண்டு படங்கள் வெற்றி பெற்றதால் தமிழ் சினிமா வட்டாரத்தில் அதிக கவனத்தை பெற ஆரம்பித்தார் கவின். சமீபத்தில் இவர் நடித்த ஸ்டார் படமும் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது.

இன்னும் இரண்டு மூன்று படங்கள் வெற்றி அடைந்து விட்டால் கவின் டாப் ஹீரோக்களின் வரிசையில் வந்து விடுவார். சிவகார்த்திகேயன், சந்தானம் போன்றவர்களின் வரிசையில் விஜய் டிவியில் இருந்து வந்து சினிமாவில் தனக்கான இடத்தை பெற்றிருக்கிறார்.

மூன்றே படம் நடித்து கவின் சேர்த்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு

இருந்தாலும் அவர்களை தூக்கி விட்டது போல் தனுஷ் மற்றும் சிம்பு போன்ற ஹீரோக்கள் இவருடைய பின்னணியில் கிடையாது. தனக்கான இடத்தை பிடிப்பதற்கு கவின் போராடியது அதிகம். ஒரு அளவுக்கு வளர்ந்து வரும் ஹீரோவாக மாறியதும், அவர் மீது நிறைய நெகட்டிவ் விமர்சனங்களும் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இருந்தாலும் தன்னுடைய ஸ்டைலில் அந்த நெகட்டிவிட்டியை கையாண்டு வருகிறார் கவின். அவருடைய பிறந்த நாளான இன்று அவருக்கு இருக்கும் சொத்து மதிப்புகள் பற்றி விவரங்கள் வெளியாகி இருக்கிறது. கவின் ஒரு படத்திற்கு 1.5 கோடி முதல் 2 கோடி சம்பளமாக வாங்குகிறார்.

கவினின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ஐந்து முதல் ஏழு கோடி ஆகும். கவினுக்கு சென்னையில் சொந்தமாக ஒரு பிளாட்டும் இருக்கிறது. மேலும் கவின் சொந்தமாக ஒரு கார் வைத்திருக்கிறார்.

கவின் பக்கம் அடிக்கும் அதிர்ஷ்ட காத்து

Next Story

- Advertisement -