Tamil Cinema News | சினிமா செய்திகள்
கைதி பட ஜார்ஜ் மரியானுக்கு இவ்வளவு பெரிய மகனா.. அதுவும் திரில்லர் படத்தில் ஹீரோவா!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த கைதி படத்தில், கதாநாயகனாக நடித்த கார்த்திக்குக்கு நிகரான நடிப்பை வெளி காட்டியவர் நடிகர் ஜார்ஜ் மரியான். இவர் நடித்த மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள் உள்ளிட்ட படங்களில் ஜார்ஜ் மரியானின் நகைச்சுவை ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது.
இன்னிலையில் தற்போது ஜார்ஜ் மரியான் தன்னுடைய மகன் பிரிட்டோ அவர்களை கதாநாயகனாக அறிமுகம் செய்யும் திரைப்படம் தான் ‘தூங்கா கண்கள்’. இந்தப்படத்தில் ஜார்ஜ் மரியான் முக்கிய கதாபாத்திரத்தில் தன்னுடைய மகனுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
அத்துடன் இந்த படத்தில் தென் தமிழகத்தை மையமாக கொண்டு கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தூங்கா கண்கள் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே இதுவரை தமிழ் சினிமா பார்க்காத வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட தூங்கா கண்கள் திரைப்படமானது திரில்லர், சஸ்பென்ஸ், ஹாரர் கலந்த விறுவிறுப்பான படமாக உருவாக்கப்பட்டுள்ளதாம். கதாநாயகன் பிரிட்டோ இந்த படத்தில் அக்ஷரா, ரேஷ்மா என்ற இரு கதாநாயகிகளுடன் நடிக்கிறார்.
வினோ இயக்கத்தில் உருவாகி இருக்கும் தூங்கா கண்கள் திரைப்படம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் செங்கோட்டை சென்னை நாகர்கோவில் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதியில் எடுக்கப்பட்டு படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த நிலையில் விரைவில் திரைக்கு காத்திருக்கிறது.

kaithi-george-mariyan-son
தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக முதல் முதலாக அறிமுகமாகும் ஜார்ஜ் மரியானின் மகனுக்கு தூங்கா கண்கள் திரைப்படம் திருப்புமுனையாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
