நான் இன்றுவரை கடனில் தான் வாழ்கிறேன்.. குமுறிய நடிகர் ஜெய்

நடிகர் ஜெய், தேனிசை தென்றல் தேவாவின் நெருங்கிய உறவினர் ஆவார். திரையுலகில் இசையமைப்பாளராக வேண்டும் என்ற கனவில் இருந்த ஜெய் எதிர்பாராத விதமாக நடிகரானவர். முதன்முதலில் தளபதி விஜயின் பகவதி படத்தில் விஜயின் தம்பியாக நடித்திருந்தார். அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெங்கட் பிரபுவின் சென்னை 28 படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார்.

சினிமா முகமில்லாத, எதார்த்தமான இவருடைய முக வசீகரத்தினால் இளைஞர்களின் மனதை கவர்ந்தார். இவருக்கு பெண் ரசிகைகளும் அதிகம். சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி ஹீரோ வரிசையில் இருந்தார்.

Also Read: தயாரிப்பாளர்கள் தலையில் துண்டு போட்ட 6 நடிகர்கள்.. சாக்லேட் முகத்தால் பரிதவிக்கும் ஜீவா

அதிர்ஷ்டம் இவருக்கு நிறைய படவாய்ப்புகளை கொட்டி கொடுத்தாலும் ஜெய் அதை சரியாக பயன்படுத்தவில்லை என்றே சொல்லலாம். குடிப்பழக்கம், நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, காதல் பிரச்சினை என அவரே அவருடைய பெயரை கெடுத்துக் கொண்டார். திருமணம் என்னும் நிக்காஹ் திரைப்படத்திற்கு பிறகு ஜெய்க்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.

சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய தனிப்பட்ட வாழக்கையை பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார். அந்த பேட்டியில் மற்றவர்கள் நினைப்பது போல நான் இல்லை இன்றும், என்னுடைய குடும்பம் இன்னும் கடனில் தான் இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.

Also Read: காதலியை கழட்டி விட்ட ஜெய்.. கமுக்கமாக நடக்கும் திருமண ஏற்பாடு

2015 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்த ஜெய்யின் மீது சினிமா வட்டாரங்களில் இருப்பர்வர்கள், ரசிகர்கள் என எல்லோரும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். நல்ல நிலைக்கு வர வேண்டிய நடிகர் இப்படி ஆனது அனைவருக்கும் அதிர்ச்சியே.

இனிவரும் வாய்ப்புகளை ஜெய் எப்படி பயன்படுத்த போகிறார் என்பதும் தெரியவில்லை. எப்படி இருந்தாலும் பழைய வெற்றியும், பெயரும் , ரசிகர்களும் மீண்டும் கிடைப்பது ரொம்பவும் அரிது. ஜெய் இப்போது வேட்டை மன்னன், அர்ஜுனன் காதலி என்னும் படங்களில் நடித்து வருகிறார்.

Also Read: ஒரு சூப்பர் ஹிட் படத்தோட காணாமல் போன இயக்குனர்.. எல்லாம் ஜெய் ராசி தான் போல

- Advertisement -