ஜெய் தவறவிட்ட 4 படங்கள்.. இவர் நடிச்சிருந்தா தலையெழுத்தே மாறியிருக்கும்

தமிழ் திரையுலகில் சுப்ரமணியபுரம், சென்னை 28 உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்த நடிகர் ஜெய் நடிப்பில் சமீபகாலமாக வெளிவரும் படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. காதல் பிரச்சினை உள்ளிட்ட பல சிக்கல்களில் இருந்து தற்போது மீண்டு வந்திருக்கும் அவர் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில் அவர் மிஸ் பண்ணிய சில திரைப்படங்கள் குறித்து வருத்தத்துடன் பேசியுள்ளார். சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக அந்த திரைப்படங்களில் அவரால் நடிக்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் அவர் தவறவிட்ட நான்கு திரைப்படங்கள் பற்றி இங்கு காண்போம்.

நாடோடிகள் சமுத்திரகனியின் இயக்கத்தில் சசிகுமார், அனன்யா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் நடிக்க முதலில் ஜெய்யிடம்தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவர் அப்போது வேறு திரைப்படங்களில் பிஸியாக இருந்ததால் இந்த திரைப்படத்தில் நடிக்க இயலாமல் போய்விட்டது. ஒருவேளை அவர் இந்த திரைப்படத்தில் நடித்து இருந்தால் அவருடைய கெரியரில் இப்படம் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கும்.

சிவா மனசுல சக்தி இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி கலந்து எடுக்கப்பட்டிருந்தது. இளைஞர்களை பெரிதும் கவர்ந்த இந்த திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு முதலில் ஜெய்க்கு தான் கிடைத்தது. ஆனால் சில காரணங்களால் அவர் இந்த வாய்ப்பை தவற விட்டுவிட்டார்.

விண்ணைத்தாண்டி வருவாயா இப்படம் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷாவின் நடிப்பில் வெளிவந்த அழகான காதல் திரைப்படம். மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தில் முதலில் ஜெய் தான் நடிக்க இருந்தார். ஆனால் அவருடைய போதாத நேரம் இந்த வாய்ப்பு கை நழுவி போனது.

ராட்சசன் விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பயங்கர த்ரில்லாக எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் ஜெய் தான். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வரை அவர் இந்தப் படத்திற்காக காத்திருந்தார். ஆனால் படத்தின் பணிகள் காலதாமதமான காரணத்தால் அவர் வேறு படங்களில் கமிட்டாகி நடிக்க ஆரம்பித்துவிட்டார். அதனால் இந்த வாய்ப்பு அவருக்குக் கிடைக்காமல் போனது.

Next Story

- Advertisement -