
ராஜா ராணி, தேவதையை கண்டேன் போன்ற பல சீரியல்களில் நடித்தவர் நடிகர் ஈஸ்வர். அவர் தனது நீண்ட நாள் தோழி யும் நடிகையுமான ஜெயஸ்ரீயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜெயஸ்ரீ ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உண்டு.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெயஸ்ரீ தன் கணவர் ஈஸ்வர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையில் புகார் அளித்தார். அதில் ஈஸ்வருக்கும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமிக்கும் தவறான உறவு இருப்பதாகவும், இதனால் ஈஸ்வர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார். இதனால் போலீசார் ஈஸ்வரை கைது செய்தனர்.
தற்பொழுது ஈஸ்வர், ஜெயஸ்ரீ இருவரும் விவாகரத்து கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் ஈஸ்வர் தன் மனைவி ஜெயஸ்ரீக்கு தயாரிப்பாளர் சண்முகம் கொலை மிரட்டல் விடுப்பதாக போலீசில் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில் அவர்கூறியிருப்பதாவது, சண்முகத்தின் மகன் டாக்டர் ராகவேஷ் உடன் ஜெயஸ்ரீ லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார். அவர்கள் இருவரையும் பிரிப்பதற்காக தயாரிப்பாளர் சண்முகம் தன்னிடம் உதவி கேட்டதாகவும் அதற்கு தான் ஜெயஸ்ரீ விஷயத்தில் தலையிட விரும்பவில்லை என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தயாரிப்பாளர் சண்முகம் ஜெயஸ்ரீயை காரை ஏற்றிக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். ஒருவேளை அப்படி ஏதாவது நடந்துவிட்டால் எங்கே அந்த பழி தன்மீது வந்துவிடுமோ என்ற எண்ணத்தில்தான் புகார் அளித்தேன் என்று ஈஸ்வர் விளக்கமளித்துள்ளார்.
இது தவிர ஜெயஸ்ரீக்கு பல ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள் என்றும், விவாகரத்து வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு வரும்போது கூட தன் ஆண் நண்பருடன் அவர் வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஈஸ்வர் கூறிய இந்த விஷயம் தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.