செட்டாகாத 5 படத்தில் நடித்த அரவிந்த்சாமி.. வெங்கட் பிரபுவை நம்பி மோசம் போன சாக்லேட் பாய்

Actor Arvind Samy: நடிகர் அரவிந்த்சாமி தளபதி, ரோஜா, பம்பாய் போன்ற அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே முன்னணி ஹீரோவாக பரிச்சயமானவர். தற்பொழுது தன்னுடைய இரண்டாவது இன்னிங்சிலும் மாஸ் கம்பேக் கொடுத்து வெற்றி கொடி நாட்டி வருகிறார். அரவிந்த்சாமி சில நேரங்களில் தனக்கு செட்டாகாத கேரக்டர்களில் நடித்து மொத்தமாக சொதப்பியதும் உண்டு. இந்த ஐந்து படங்கள் அவருக்கு மிகப்பெரிய தோல்வியாக அமைந்திருக்கின்றன.

தாலாட்டு: தாலாட்டு என்னும் திரைப்படத்தில் அரவிந்த்சாமி குழந்தை எனும் கேரக்டரில் நடித்திருப்பார். ரோஜா மற்றும் பம்பாய் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மாடர்ன் சாக்லேட் பாய் ஹீரோவாக இருந்த இவர் திடீரென சின்னதம்பி பிரபு போல் முயற்சி செய்து இந்த படத்தில் நடித்தது மொத்தமாக சொதப்பியது.

Also Read:அரவிந்த்சாமி அசத்திய 5 சூப்பர் ஹிட் படங்கள்.. மூன்று மெகா ஸ்டார்களுடன் அறிமுகமான கூட்டணி

புதையல்: தளபதி திரைப்படத்திற்குப் பிறகு மம்மூட்டி மற்றும் அரவிந்த்சாமி இணைந்து நடித்த திரைப்படம் புதையல். இந்த படத்தில் அவர் கோடீஸ்வரர் இளைஞனாக நடித்திருப்பார். ஆனால் இந்த கேரக்டரும் அவருக்கு செட்டாகவில்லை. மேலும் கவுண்டமணி மற்றும் செந்தில் உடன் இவர் நடித்த காமெடி காட்சிகளும் அவ்வளவாக மக்கள் மனதில் நிற்கவில்லை.

தேவராகம்: இயக்குனர் பரதன் இயக்கத்தில் வெளியான மலையாள திரைப்படம் தான் தேவராகம். இந்த படத்தில் அரவிந்த்சாமி பூசாரி ஆக நடித்திருப்பார். கட்ட பிரம்மச்சாரி ஆக வாழ வேண்டிய இவர் திடீரென ஒரு பெண் மீது காதல் வயப்படுவதால் ஏற்படும் பின் விளைவுகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் இது. இந்த படமும் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது.

Also Read:20 வயதில் 5 சூப்பர் ஹிட் படங்கள்.. பக்கவாதத்திலிருந்து மீண்டு வந்து வெளுத்து வாங்கும் சூப்பர் ஸ்டாரின் தம்பி

சாசனம்: நடிகர் அரவிந்த்சாமி நடித்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சாசனம். இந்த படத்தில் அவருடன் கௌதமி, ரஞ்சிதா மற்றும் தலைவாசல் விஜய் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இந்திய தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த படம் அரவிந்த்சாமிக்கு தோல்வி படமாக தான் அமைந்தது. இப்படி ஒரு படம் ரிலீஸ் ஆனது பலருக்கும் தெரியாது.

கஸ்டடி: இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தின் சமீபத்தில் வெளியான திரைப்படம் கஸ்டடி. இந்த படத்தில் நாக சைதன்யா ஹீரோவாக நடித்திருந்தார். அரவிந்த்சாமி ராஜசேகர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிய இந்த படம் ரிலீசுக்கு பின் பொருளாதார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது.

Also Read:நடிப்பெல்லாம் சும்மா ஹாபி தான்.. இவ்வளவு பெரிய நிறுவனத்தின் வாரிசா நம்ம அரவிந்த் சாமி?

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்