அரவிந்த்சாமி அசத்திய 5 சூப்பர் ஹிட் படங்கள்.. மூன்று மெகா ஸ்டார்களுடன் அறிமுகமான கூட்டணி

Actor Aravindswamy: செல்வாக்கான சூழலிலும், நடிக்கும் வாய்ப்பை பெற்று தன் திறமையை வெளிக்காட்டியவர் அரவிந்த்சாமி. இவர் மேற்கொண்ட எண்ணற்ற படங்களின் மூலம் மக்கள் இடையே பெரிதும் பேசப்பட்டவர்.

மேலும் தன் முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை சந்தித்த முன்னணி நடிகர் தான் அரவிந்த்சாமி. அவ்வாறு அக்கால சாக்லேட் பாய் ஆன இவர் அசத்திய 5 சூப்பர் ஹிட் படங்களை பற்றி இங்கு காண்போம்.

Also Read: மீண்டும் களமிறங்கும் தமிழா தமிழா.. கரு. பழனியப்பனை கழட்டிவிட்டு தொகுத்து வழங்கப் போவது இவர்தான்

தளபதி: இயக்குனர் மணிரத்னத்தால் அறிமுகமான அரவிந்த்சாமி ஏற்ற முதல் படம் தான் தளபதி. நடிப்பை பற்றி தெரியாத இவர் ஏற்ற கதாபாத்திரம் தன் அண்ணனான ரஜினிக்கு எதிராய் சிறப்புற நடித்திருப்பார். மேலும் தன் முதல் படத்திலேயே மணிரத்னம், ரஜினி, மம்முட்டி போன்ற மூன்று பிரபலங்களோடு இணையும் வாய்ப்பை பெற்றவர். மேலும் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை தந்த படம் தான் தளபதி.

ரோஜா: மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி முன்னணி கதாநாயகனாக இடம் பெற்ற படம் தான் ரோஜா. இப்படத்தில் தீவிரவாதிகளால் கடத்தி வைக்கப்பட்டு, பெரும் துயரத்தை உணர்த்தும் கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்திருப்பார். இவர் மேற்கொண்ட எண்ணற்ற படங்களில் இப்படம் இவருக்கு மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது.

Also Read: விஜய் சினிமாவை விட்டு விலகினால் எங்களுக்கு நஷ்டம் இல்லை.. பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்

பாம்பே: 1995ல் அரவிந்த்சாமி, மனிஷா கொய்ராலா ஆகியோர் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படம் மதம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ளும் விதமாய் தன் நடிப்பை வெளிக்காட்டி இருப்பார் அரவிந்த்சாமி. மேலும் இப்படம் ஒரு தரப்பினரிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வணிகர் ரீதியான வெற்றியை கண்டது.

மின்சார கனவு: 1997ல் ராஜு மேனன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் அரவிந்த்சாமி, பிரபுதேவா, கஜோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார் அரவிந்த்சாமி. அதிலும் குறிப்பாக தான் விரும்பும் பெண், தன்னை ஏற்க மறுத்ததால் அதன் பின் பாதிரியார் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படமும் அவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. மேலும் 175 நாள் திரையில் ஓடி, வணிக ரீதியான வெற்றியை கண்டது.

Also Read: சக நடிகர்களை தூக்கி விட்டு அழகு பார்த்த 5 ஹீரோக்கள்.. சிம்புவிற்கு நிகராக போட்டி போடும் சந்தானம்

தனி ஒருவன்: சினிமா வாய்ப்பை தவறவிட்ட இவர் அதன் பின் ரீ என்ட்ரி கொடுத்து, நல்ல விமர்சனம் கண்ட படம் தான் தனி ஒருவன். இருப்பினும் இப்படத்தில் இவர் நெகட்டிவ் ரோலில் இடம் பெற்றிருப்பார். மேலும் பணத்திற்காக இவர் மேற்கொள்ளும் செயல்கள் படத்தில் பெரிதும் பேசப்பட்டது. இப்படமும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. மேலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலாக 105 கோடியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்