தயாரிப்பிலும் ஒரு கலக்கு கலக்கிய அர்ஜுன்.. ஆக்சன் கிங் கல்லாவை நிரப்பிய 5 படங்கள்

Arjun As Successful Producer: 90களின் இறுதியில் இருந்து தமிழ் சினிமாவில் ஆக்சன் ஹீரோவாக கலக்கி வருபவர் அர்ஜுன். தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடித்து கொண்டிருக்கும் லியோ திரைப்படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வருகிறார். ஒரு நடிகராக மட்டும் வெற்றியடையாமல் அர்ஜுன், தயாரிப்பாளராகவும் நிறைய படங்களை தயாரித்து இருக்கிறார். இவருடைய தயாரிப்பில் இந்த 5 படங்கள் வசூலில் கல்லா கட்டி இருக்கின்றன.

சேவகன் : தயாரிப்பாளராக மட்டுமில்லாமல் அர்ஜுன் முதன் முதலில் இயக்குனராக அறிமுகமான படம் சேவகன். இந்த படம் 1992 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு கதை மற்றும் திரைக்கதையும் கூட அர்ஜூனே எழுதியிருந்தார். இந்த படம் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சனில் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

Also Read:யாரும் வராததால் பல கோடிகளை வாரி இறைக்கும் தயாரிப்பாளர்.. வாழ்நாளில் அதிக சம்பளம் வாங்கிய அர்ஜுன்.!

பிரதாப்:1993 ஆம் ஆண்டு வெளியான அதிரடி, ஆக்சன் திரைப்படம் பிரதாப். இந்த படத்தில் அர்ஜூனுடன் இணைந்து குஷ்பூ மற்றும் ஜனகராஜ் நடித்திருந்தனர். இந்த படத்தையும் ஆக்சன் கிங் அர்ஜுன் தான் எழுதி இயக்கிருந்தார். பிரதாப் திரைப்படம் தமிழில் வெற்றியடைந்ததை தொடர்ந்து தெலுங்கில் முட்டா ரவுடி என்னும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

வேதம்: அர்ஜுன், சாக்சி, திவ்யா உன்னி, வினித், கவுண்டமணி, செந்தில் போன்ற நட்சத்திர பட்டாளங்களுடன் வெளியான படம் வேதம். இந்த படம் 2001 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அர்ஜுன் வேதம் படத்தை தயாரித்ததோடு, இயக்கியும் இருந்தார். மேலும் இந்த படத்தில் நடிகர் விஷால், அர்ஜுனிடம் உதவி இயக்குனராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read:சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க மறுத்த அர்ஜுன்.. வேறு வழி இல்லாமல் மொக்க ஹீரோவை போட்ட தயாரிப்பாளர்

ஜெய்ஹிந்த் 2 : 1994 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியாக மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் ஜெய்ஹிந்த். இந்த படத்தின் இரண்டாம் பாகமாக 2014 ஆம் ஆண்டு வெளியானது தான் ஜெய்ஹிந்த் 2 . இந்த படத்தை அர்ஜுன் இயக்கி, தயாரித்து இருந்தார். ஜெய்ஹிந்த் 2 திரைப்படம் கர்நாடகாவில் சிறந்த படத்திற்கான மாநில விருதை பெற்றது.

துட்ட முட்டா : தமிழ் மட்டுமில்லாமல் கன்னடத்திலும் ஆக்சன் கிங் அர்ஜுன் தயாரிப்பாளராக ஜெயித்த திரைப்படம் தான் துட்ட முட்டா. இந்த படத்தில் ரமேஷ் அரவிந்த் மற்றும் கஸ்தூரி நடித்திருந்தனர். மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது.

Also Read:விஜய்யிடம் வாங்க வேண்டிய அடி.. கடைசி நேரத்தில் எஸ்கேப் ஆன அர்ஜுன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்