யாரும் வராததால் பல கோடிகளை வாரி இறைக்கும் தயாரிப்பாளர்.. வாழ்நாளில் அதிக சம்பளம் வாங்கிய அர்ஜுன்.!

தமிழ் சினிமாவில் 90களில் ஆக்சன் கிங் ஆக வலம் வந்து கொண்டிருந்த அர்ஜுன் தற்போது எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பின்னி பெடல் எடுத்துக் கொண்டிருக்கிறார். அதிலும் இப்போது அர்ஜுன் டாப் ஹீரோக்களின் வில்லனாக நடித்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இப்போது தளபதிக்கு வில்லனாக போகும் அர்ஜுன் இதுவரை வாழ்நாளில் வாங்காத அதிக சம்பளம் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக தமிழகத்தில் தளபதி விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் அவருக்கு வில்லனாக நடித்தால் சரிப்பட்டு வராது என நடிக்க தயங்குவார்கள்.

Also Read: ஓவரா அலைக்கழிக்கும் லோகேஷ்.. தளபதி 67ஆல் குழம்பி போயிருக்கும் விஜய்

அப்படி விஜய் அடுத்ததாக நடிக்கும் தளபதி 67 படத்தில் ஏகப்பட்ட வில்லன்கள் இருப்பதால் படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ் அவரது ஸ்டைலில் பல ஹீரோக்களை விஜய்க்கு வில்லனாக மாற்ற நினைத்தார். அப்படி பிரித்விராஜ், விஷால் உள்ளிட்டோரை இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க வைக்க அணுகிய போது அவர்கள் மறுத்துவிட்டனர்

எப்படியோ கேங்ஸ்டர் படமாக உருவாகும் தளபதி 67 படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மலையாள நடிகர் நிவின் பாலி, மன்சூர் அலிகான், இயக்குனர் கௌதம் மேனன், மிஸ்கின் ஆகியோர் நடிக்க உள்ளனர். இதில் முக்கிய வில்லனாக இருக்கும் அர்ஜுன், சஞ்சய் தத் உறுதியாக நடிக்கிறார்கள்.

Also Read: சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க மறுத்த அர்ஜுன்.. வேறு வழி இல்லாமல் மொக்க ஹீரோவை போட்ட தயாரிப்பாளர்

இவர்கள் இருவருக்கும் அதிக சம்பளம் வழங்கி உள்ளார்களாம். சஞ்சய் தத்திற்கு 10 கோடி, அர்ஜுனுக்கு 5 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார்கள். அதிலும் அர்ஜுன் சினிமா பயணத்தில் இந்த அளவு அதிக சம்பளம் வாங்கியது இந்த படத்தில் மட்டுமே.

இப்படி வில்லன்களுக்கு தளபதி 67 படத்தின் தயாரிப்பாளர் வாரி இறைப்பதுடன், படத்திற்கு முக்கியமான நடிகைகள் நடிக்க வேண்டும் என்று லோகேஷ் சொன்னதற்கு இணங்க தயாரிப்பாளர் பணத்தை வாரி இறைத்து வருகிறார்.

Also Read: தேடிப் போய் வாய்ப்பு கொடுத்த லோகேஷ்.. விஜய்யுடன் ஒரு சம்பவம் இருக்கு, சஸ்பென்சை உடைத்த விஷால்

- Advertisement -