மாறனுடன் கூட்டணி போடும் அல்லு அர்ஜுன்.. அட்லீயின் அடுத்த பட ஹீரோ ரெடி

Actor Allu Arjun to join Atlee’s next film: ராஜா ராணி மூலம் அறிமுகமான சங்கரின் உதவி இயக்குனர் அட்லீ தற்போது தமிழனுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்தியாவின் முன்னணி இயக்குனர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள் அட்லீயின் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்ட, தற்போது மும்பையிலேயே வீடு கட்டி செட்டிலாகவும் உள்ளார் அட்லீ .

இது பற்றி பேட்டி ஒன்றில் கூறிய அட்லீ, பாலிவுட்டில் ஒர்க் பண்ணும் போது மும்பையில் இருப்பதாகவும், இதுவே தமிழ் படங்களில் வேலை செய்யும் போது சென்னையில் இருப்பேன் என்றும் நடுநிலையாக பதில் அளித்தார். ஹாட்ரிக் வெற்றி கொடுத்த நிலையில் மீண்டும் அட்லீ, விஜய் கூட்டணி இணையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெங்கட் பிரபுவிடம் தஞ்சம் புகுந்தார் தளபதி.

கமர்சியல் படங்களை கவனமாக கையாளும் அட்லீ மற்றும் ஷாருக்கான் இணைந்த ஜவான் திரைப்படம் உலக அளவில் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை புரிந்தது.  மீண்டும் அட்லீயின் இயக்கத்தில் ஷாருக்கான் இணைவதாக இருந்த ப்ராஜெக்ட் தற்போதைக்கு கொஞ்சம் ஓரம் கட்டப்பட்டுள்ளது.

Also read: ஷாருக்கான் வாலை விடாமல் பிடித்துக் கொள்ளும் நடிகர்.. மூன்று மடங்கு சம்பளத்துக்கு அட்லீயை வைத்து விட்ட தூது

ஜவான் படத்தில் இடம்பெறும் இறுதிக்காட்சியில் சஞ்சய் தத் கதாபாத்திரத்தில் நடிக்க அட்லீ, முதலில் தனது பேவரைட் ஹீரோவான விஜய்யை அனுகி உள்ளாராம். அந்த நேரத்தில்  கால்ஷீட் பிரச்சனையால் அவர் நோ சொல்ல அடுத்ததாக புஷ்பா படத்தில் நடித்துக் கொண்டிருந்த அல்லு அர்ஜுனை கேமியோ ரோலில் நடிக்க வைக்க அட்லீ ஆசைப்பட்டாராம் அதுவும் முடியாமல் போனது.

அந்த ஆசையை நிறைவேற்றும் பொருட்டு தற்போது அட்லீ, அல்லு அர்ஜுன் உடன் புஷ்பா 2 படத்திற்கு பின் கைகோர்க்க உள்ளதாக  தகவல். அல்லு அர்ஜுனின் தயாரிப்பு நிறுவனமும் இப்படத்திற்கு போட்டி போட, அட்லீ ஏற்கனவே பேசி வைத்த சன்பிக்சர்ஸையும் விட்டுகொடுக்காது தரமான சம்பவம் செய்து உள்ளார்.

பான் இந்தியா படமாக உருவாகும் இதில் தமிழ் பதிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனமும், தெலுங்கு வெர்ஷனை அல்லு அர்ஜுனின் கீதா ஆர்ட்ஸ் நிறுவனமும் கூட்டணி போட்டு தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அல்லு அர்ஜுன் தற்போது நடித்து கொண்டிருக்கும் புஷ்பா 2 ஆகஸ்ட் 15 திரைக்கு வந்தவுடன் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனின் பிரம்மாண்ட தயாரிப்பில் அட்லீ மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணியில் அமர்க்களம் ஆரம்பமாக உள்ளது.

Also read:  புஷ்பா 2-க்கு பிறகு தமிழ் பட ரீமேக்கில் நடிக்க போகும் அல்லு அர்ஜுன்.. சர்ப்ரைஸ் தாங்காமல் வளைத்துப் போட்ட சம்பவம்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை