தோல்வி பயத்தால் ஓவரா ஆழம் பார்க்கும் அஜித்.. மகிழ்திருமேனிக்கு போட்ட 3 கண்டிஷன்கள்

நடிகர் அஜித்குமாருக்கு துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்து இருக்கிறது. இந்த வெற்றியை தக்க வைத்து கொள்ள அஜித்குமார் ரொம்பவும் கவனமாக இருக்கிறார். ஏற்கனவே ஒரு வருட காலம் டைம் கொடுத்தும் விக்னேஷ் சிவன் கொடுத்த கதை திருப்தியடையாததால் அவரை நடிகர் அஜித் மற்றும் லைக்கா புரொடக்சன்ஸ் சேர்ந்து ஏகே 62 புராஜெக்ட்டில் இருந்து நீக்கிவிட்டார்கள்.

அதன் பின்னர் நடிகர் அஜித்குமாரின் 62 வது படத்தை யார் இயக்க போகிறார்கள் என்று ஒரு மிகப்பெரிய கேள்வி எழுந்தது. இயக்குனர்கள் விஷ்ணுவர்தன், கே எஸ் ரவிக்குமார், முத்தையா என நாளுக்கு நாள் ஏகே 62 இயக்குனர்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே போனது. இறுதிக்கட்டமாக் இயக்குனர் மகிழ்திருமேனி தான் இந்த படத்தை இயக்க போகிறார் என உறுதியாகிவிட்டது.

Also Read: ஸ்காட்லாந்தில் இருந்து ஏகே 62-க்கு அப்டேட் கொடுத்த அஜித்.. விடாமல் துரத்தியதால் கூறிய பதில்

இயக்குனர் மகிழ் திருமேனி ஏற்கனவே தடையறத் தாக்க, தடம், மீகாமன் போன்ற வித்தியாசமான கதை களங்களில் படம் இயக்கியவர். இவருடைய கதைகள் பிடித்து தான் மகிழ்திருமேனியை அஜித் தேர்வு செய்திருக்கிறார். இருந்தாலும் சற்றும் திருப்தியடையாத அவர், தொடர்ந்து மகிழ் திருமேனிக்கு கண்டிஷன் மேல் கண்டிஷன் போட்டு வருகிறாராம்.

அதாவது மகிழ்திருமேனியிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக இருப்பவர்கள் கண்டிப்பாக விஸ்காம் படித்தவர்களாக இருக்க வேண்டும். அது மட்டும் இல்லை உதவி இயக்குனர்கள் 2k கிட்ஸ் இன் மனநிலையை புரிந்து இருக்க வேண்டும். மேலும் 3 கோ டைரக்டர்ஸ் அனுபவம் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும், அவர்கள் இயக்குனர் கூடவே இருக்க வேண்டும்.

Also Read: AK-62, விக்னேஷ் சிவனை ஒதுக்க காரணமாய் இருந்த 5 விஷயங்கள்.. அஜித்தை இப்படி சங்கடப்படுத்தி இருக்காரே!

இதுவும் போதாது என்று மார்ச் முதல் வாரத்தில் படத்தின் சூட்டிங் நடக்க வேண்டும் அதற்குள் இரவும் பகலும் டிஸ்கஷன் நடத்த தயாராக இருக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறியிருக்கிறாராம் அஜித்குமார். இவர் முந்தைய படங்களில் இயக்குனர்களை இப்படியெல்லாம் தொந்தரவு செய்ததே இல்லை. AK 62விற்கு தான் இப்படி பயங்கர கிடுக்கிப்பிடி போட்டு வருகிறார்.

இதற்கு காரணம் அஜித் இதுவரை பார்க்காத வெற்றியை துணிவு திரைப்படத்தில் பார்த்ததால் தான். மேலும் நடிகர் விஜய் அடுத்து லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் பணிபுரிந்து வருகிறார். இதுவும் அஜித்தின் பயத்திற்கு ஒரு காரணம் தான். விஜய்யை ஜெயித்தே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறார் நடிகர் அஜித்.

Also Read:கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டல.. அஜித் படத்தில் விலகியதைப் பற்றி பெரிய கதையாக உருட்டும் விக்னேஷ் சிவன்

 

 

Next Story

- Advertisement -