ரீ-என்ட்ரி கொடுக்கும் அஜித் பட ஹீரோயின்.. கேடுகெட்ட சகவாசத்தால் சகலத்தையும் இழந்த கொடுமை

Actor Ajithkumar: சினிமாவின் முன்னணி ஹீரோக்களான அஜித் மற்றும் மாதவன் போன்றவர்களுடன் ஜோடி சேர்ந்த நடிகை ஒருவர் கிட்டத்தட்ட 13 வருடங்களுக்குப் பிறகு ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். சமீப காலமாக எதிர்பாராத விதமாக நிறைய ஹீரோயின்கள் இப்படி ரீ என்ட்ரி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது இந்த நடிகை திரும்ப நடிக்க வருவது என்பது எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

இந்த நடிகை ஒரு காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயினாக இருந்தவர். குறுகிய காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் இருந்திருந்தாலும் தனக்கான அடையாளத்தை உருவாக்கிய இந்த நடிகை தேவையில்லாத சில பழக்கவழக்கங்களால் தன் கேரியரை மொத்தமாக இழந்து, இருக்கும் இடம் தெரியாமல் அடையாளம் இல்லாமல் போனவர் தான் இவர்.

Also Read: எம்ஜிஆர் யுக்தியை பாலோ பண்ண நினைக்கும் அஜித்.. விஜய்யுடன் போட்டி போட விரும்பாத ஏகே

தமிழில் சித்திரம் பேசுதடி என்னும் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை பாவனா. அதன்பின்ன ஜெயம் ரவியுடன் தீபாவளி, நடிகர் அஜித்குமார் உடன் ஏகன், மாதவனுடன் வாழ்த்துக்கள் போன்று பல படங்களில் நடித்த இவர், தென் இந்திய சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வளர்ந்து கொண்டிருந்த பொழுதே ஒரு மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார்.

மலையாள சினிமா உலகின் முன்னணி ஹீரோவாக இருந்த நடிகர் திலீப் மூலம் இவருக்கு நிறைய பிரச்சனை ஏற்பட்டது. இறுதியில் திலீப் கூலி படையை வைத்து பாவனாவை மானபங்கம் செய்து விட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று வரை கேரள உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு தான் நடிகை மஞ்சுவாரியர் கூட அவருடைய காதல் கணவர் திலீப்பை விவாகரத்து செய்தார்.

Also Read:சூர்யா பட இயக்குனருடன் கைகோர்க்கும் அஜித்.. விடாமுயற்சிக்குப் பிறகு புது அவதாரம் எடுக்கும் ஏ கே

அந்த சம்பவத்திற்கு பிறகு பாவனா சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார். திருமணம் செய்து கேரளாவில் செட்டிலாகி இருக்கும் இவர் தற்போது 13 வருடங்களுக்குப் பிறகு தி டோர் என்னும் திரைப்படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுக்கிறார். பல சர்ச்சைகளுக்குப் பிறகு பாவனா தற்போது மீண்டும் நடிப்பு துறைக்கு திரும்பி இருக்கிறார்.

பாவனா சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தாலும் அவரை சுற்றிய சர்ச்சைகளுக்கு எப்போதுமே பஞ்சமில்லாமல் தான் இருந்தது. பல வருடங்களுக்கு முன் இயக்குனர் மிஷ்கின் கல்லூரி விழா ஒன்றில் பாவனாவை பற்றி சொன்ன கருத்து ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக வைரலாகி கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read:பில்லாவில் நடிக்க மறுத்த ஹீரோ.. அஜித் மீது இருந்த வெறுப்பால் எடுத்த முடிவு

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்