பில்லாவில் நடிக்க மறுத்த ஹீரோ.. அஜித் மீது இருந்த வெறுப்பால் எடுத்த முடிவு

Actor Refused to act in Billa:அஜித்தின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் தான் பில்லா. இந்த படத்தில் நமீதா, நயன்தாரா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக இரண்டாம் பாகமும் எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகரை நடிக்க வைக்க இயக்குனர் விஷ்ணுவர்தன் முயற்சி செய்து உள்ளார். ஆனால் ஆரம்பத்தில் அந்த நடிகர் பில்லா படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்து விட்டாராம். அதற்கு காரணம் அஜித் தான் என்று கூறப்படுகிறது. அதாவது ஒரு காலகட்டத்தில் கதாநாயகனாக படங்களில் நடித்து வந்தவர் ரகுமான்.

Also Read : ஓவர் ஆட்டிடியூட் காட்டிய அஜித் மச்சினிச்சி.. ஹீரோயினையே மாற்றிய தனுஷ்

தனது மார்க்கெட் போன பிறகு படங்களில் வில்லன் அவதாரம் எடுத்தார். அதன்படி பில்லா படத்தில் ரகுமானை படக்குழு அணுகி உள்ளது. அந்தச் சமயத்தில் அஜித்தை பற்றி நிறைய தவறான செய்திகள் பத்திரிக்கையில் இடம் பெற்றிருந்தது. இதைப் படித்த ரகுமான் அவர் மீது அதிருப்தியில் இருந்துள்ளார்.

அதனால்தான் ஆரம்பத்தில் பில்லா படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்து இருக்கிறார். அதன் பிறகு எப்படியோ ரகுமானை சம்மதிக்க வைத்து பில்லா படத்தில் நடிக்க வைத்தனர். அந்தச் சமயத்தில் படத்தில் நடிக்கும் போது தான் அவர் எப்படிப்பட்ட மனிதர் என்பதை ரகுமான் உணர்ந்துள்ளார். ஏற்றத்தாழ்வு இல்லாத ஒரு மனிதர்.

Also Read : பிஞ்சிலேயே பழுக்க வைக்கப்பட்டு கேரியரை தொலைக்கும் 6 நடிகைகள் .. கிளாமரில் முகம் சுளிக்க வைத்த அஜித்தின் ரீல் மகள்

எல்லோரிடமும் சரிசமமாக பழகக் கூடியவர் என்று அஜித்தை ரகுமான் புகழ்ந்து பேசி இருந்தார். அதுமட்டுமின்றி பெற்றோர்கள் சரியான விதத்தில் வளர்ந்திருந்தால் மட்டும் தான் அஜித் மாதிரியான நல்ல குணாதிசயம் கொண்ட மனிதரை இந்த உலகில் பார்க்க முடியும். அவருடன் நடித்தது எனது பாக்கியம் என்று ரகுமான் கூறியிருந்தார்.

அஜித்தை பற்றி தெரியாதவர்கள் பல பொய்யான தகவல்களை பரப்பினாலும் அவருடன் பழகிய எல்லோருமே அஜித்தை பாராட்டாமல் இருந்ததில்லை. வெளியில் பார்ப்பதற்கு கர்வம் உடையவராக தெரிந்தாலும் நிஜத்தில் வெளந்தியான மனிதர் தான் என்பது பழகிப் பார்த்தால்தான் தெரியும்.

Also Read : மின்னல் மாதிரி வந்து ஒரே படத்தில் காணாமல் போன 6 நடிகைகள்.. அஜித் விஜய்க்கு ஜோடி போட்டும் பிரயோஜனம் இல்லாத நடிகை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்