வெளிப்படையாக விஜய்க்கு எதிராக களத்தில் இறங்கிய அஜித்.. இயக்குனரின் அனுமதி இல்லாமல் செய்த வேலை

நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இயக்குனர் ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் ‘துணிவு’ படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கான அத்தனை வேலைகளும் முடிந்த நிலையில், படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. முந்தைய படங்கள் போல் இல்லாமல் அஜித் இந்த படத்தின் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

பொதுவாக அஜித் அவர் படங்களின் பாடல்கள் மீது அவ்வளவாக கவனம் செலுத்த மாட்டார். சமீபத்தில் ரிலீஸ் ஆன அஜித் படங்களின் பாடல்கள் சொல்லிகொள்ளும்படி பெரிய வரவேற்பையும் பெற்றதில்லை. ஆனால் இந்த முறை பாடல்கள் மீது அஜித் அதிக கவனமும், ஈடுபாடும் செலுத்தி வருகிறார். சமீபத்தில் கூட துணிவு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘சில்லா சில்லா’ ரிலீஸ் செய்யப்பட்டது.

Also Read: வலிமையுடன் அவர் சவகாசத்தையே முடித்துக் கொள்ள நினைத்த வினோத்.. அஜித் கூறிய அந்த ஒரு வார்த்தை

இயக்குனர் வினோத் பொதுவாக படங்களில் வரும் பாடல்கள் மீது அவ்வளவாக கவனம் செலுத்துமாட்டார். வினோத் தன்னுடைய கதைகளின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர். அப்படி தான் அவருடைய முந்தைய படங்கள் எல்லாமே இருந்தது. ஆனால் இம்முறை துணிவு திரைப்படத்தின் கதையே அப்படியே உல்டாவாக மாறியிருக்கிறது.

இந்நிலையில் தான் துணிவு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘சில்லா சில்லா’ ரிலீஸ் ஆகி இருக்கிறது. வைசாக் பாடல் எழுதி, இசையமைப்பாளர் அனிருத் இந்த பாடலை பாடியிருக்கிறார். இந்த பாட்டு வெளியான 22 மணி நேரத்திலேயே 1 கோடி பார்வையாளர்களை கடந்துவிட்டதாக படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்த பாட்டை வைக்க சொல்லி கட்டளையிட்டதே அஜித் தானாம்.

Also Read: 2ம் இடத்திற்கு தள்ளப்பட்ட விஜய்யின் ரஞ்சிதமே.. லேட்டா வந்தாலும் கெத்து காட்டிய அஜித்

இயக்குனர் வினோத்தின் விருப்பம் இல்லாமல், தலையீடு இல்லாமல் இந்த பாட்டு கடைசி நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் காரணம் நடிகர் விஜய்யின் வாரிசு பட பாடல் தான் என்று கூறுகிறார்கள். வாரிசு படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்ப அதற்கு போட்டியாக தான் இந்த பாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது.

கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு பிறகு நடிகர்கள் அஜித்தும், விஜய்யும் நேருக்கு நேர் மோதுகிறார்கள். இதனால் இவர்கள் இருவர் மீதும் அழுத்தம் அதிகமாக இருக்கின்றது. இதனால் தான் இவர்கள் இருவருமே தங்களால் முடிந்தவரை ரசிகர்களை வெறியேற்றி வருகிறார்கள். அதிலும் அஜித், வாரிசை தோற்கடித்தே ஆக வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறார்.

Also Read: தல அஜித்தின் சூப்பர் ஹிட் படம் பிரபல ஹாலிவுட் படத்தின் அட்ட காப்பியா.? அடக்கொடுமையே!

Next Story

- Advertisement -