2023-லும் உருட்டும் பாரதிகண்ணம்மா.. அப்பனா இப்ப முடிக்க மாட்டாங்களா

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் விவாகரத்து செய்த பின் மீண்டும் கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ்வதற்காக பாரதி பல முயற்சிகளை மேற்கொள்கிறார். இதற்கிடையில் கண்ணம்மாவை அசிங்கப்படுத்த வேண்டும் என பாண்டி திட்டமிட்டு கேவலமான வேலையை செய்து இருக்கிறார்.

மண்டபத்திற்கு மசாலா பொருளை இறக்க வந்த கண்ணம்மாவிற்கும் தனக்கும் தகாத உறவு இருப்பதாக ஊர் முழுக்க பரப்பி விட்டார். இதனால் ஊருக்குள் வதந்திகள் பரவிய நிலையில், அது கடைசியில் தாமரை மூலம் கண்ணம்மாவிற்கும் தெரிய வருகிறது.

Also Read: 91 நாட்கள் பெஸ்ட் ஹாலிடேக்கு வந்த ரட்சிதாவின் மொத்த சம்பளம்.. கைக்கெட்டியது வாய்க்கெட்டம போச்சே

இப்படி அபாண்டமாக தன் மீது பழியை சுமத்திய பாண்டியை வெளுத்து வாங்க வேண்டும் என வெறிகொண்டு கண்ணம்மா கிளம்புகிறார். கோபத்தில் கண்ணம்மா நடக்கும் நடையை பார்த்தால், மறுபடியும் தெருத்தெருவாய் நடந்து காட்டப் போகிறாரோ என்று சின்னத்திரை ரசிகர்கள் கேலி கிண்டல் செய்கின்றனர்.

அதுமட்டுமில்லாமல் சீக்கிரம் இந்த சீரியலை முடித்துவிட்டு புத்தம் புது சீரியலான மகாநதி துவங்கப் போகிறதோ என்று யோசித்து வைத்திருந்த ரசிகர்களுக்கு, இப்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் புத்தம் புது வருடம் ஆன 2023-லும் இந்த சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னெட் மறுபடியும் பாரதிகண்ணம்மவை வைத்து உருட்ட ஆரம்பிச்சுட்டாரே! அப்படினா இந்த சீரியலுக்கு எண்டு கார்டு போட மாட்டாங்களோ என்றும் புலம்புகின்றனர்.

Also Read: பிக் பாஸ் 6-ன் நியாயம் இல்லாத 5 எலிமினேஷன்.. இப்போது வரை கொந்தளிக்கும் தனலட்சுமி ஆர்மி

முன்பு கண்ணம்மாவிற்கு வெளியாக வெண்பாவை காட்டி அவரை ஒழித்துக் கட்டவே பல வருடமாச்சு. இப்போது பாண்டியை வில்லனாக காட்டும் பிரவீன் பென்னெட் எத்தனை வருடம் உருட்ட திட்டமிட்டு இருக்கிறாரோ! என்றும் தலையில் அடித்துக் கொள்கின்றனர்.

ஆகையால் இந்த சீரியலை சீக்கிரம் முடித்துவிட்டு, புதிதாக துவங்கியிருக்கும் மகாநதி சீரியலையும் இயக்குனர் பிரவீன் பென்னெட் தான் இயக்க இருப்பதால், நல்ல கதையம்சம் கொண்ட அந்த சீரியலுக்கு சீரியலுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நல்லா இருக்கும் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்கின்றனர்.

Also Read: எதிர்நீச்சல் சீரியலுக்கு வச்ச ஆப்பு.. என்ட்ரியானது மெய்சிலிர்க்கூட்டும் புத்தம் புது சீரியல்