ஆதிரையை கரை சேர்க்க குணசேகரன் எடுக்கும் அதிரடி முடிவு.. திசைக்கு ஒன்றாக ஓட்டம் பிடித்த மருமகள்கள்

எதிர்நீச்சல் சீரியல் கொஞ்ச நாட்களாகவே ஆதிரையை வைத்து போர் அடிக்கிற மாதிரி இருந்தது. இந்நிலையில் தற்போது வந்த ஸ்பெஷல் ப்ரோமோ எல்லாத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்து விறுவிறுப்பாக கொண்டு போகுற மாதிரி இருக்கிறது. அதாவது அந்த 40% ஷேர் மட்டுமே எல்லாருடைய கண்ணுக்கும் பெரிய விஷயமாக இருந்தது.

இதற்கு தான் குணசேகரன், ரேணுகா, நந்தினி மற்றும் எஸ்கேஆர் தம்பியும் கேட்டு அப்பத்தாவிற்கு செக் வைத்து வருகிறார். ஆனால் அப்பத்தா இதை கொடுக்க முடியாது என்றும் அது என்னுடைய உரிமை அதை நான் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது. அத்துடன் இதைக் கேட்பதற்கும் யாருக்கும் உரிமையில்லை என்று இருக்கிறார்.

Also read: குணசேகரனை மடக்கிய எஸ் கே ஆர் தம்பிகள்.. இவரை மிஞ்சும் அளவிற்கு பிளான் போட்ட அப்பத்தா

இதற்கிடையில் ஆதிரையின் திருமணம் எப்படி நடக்கும் யாருடன் நடக்கும் என்று பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனால் குணசேகரன் என் தங்கச்சி ஆதரியை கரை சேர்க்க எத்தனை படாதபாடு. இப்ப அதற்கெல்லாம் சேர்த்து நான் எடுக்கப் போகும் முடிவு இந்த வீட்டின் இருப்பவர்களை எந்த நிலைமைக்கு வேண்டுமானாலும் கொண்டு போகலாம். எல்லாரும் திக்குமுக்காகி தெறிச்சி ஓட போறாங்க என்று சொல்கிறார்.

ஆனால் இவர் இப்படி சொல்கிறார் என்றால் இதற்கு பின்னாடி ஏதோ எல்லாரையும் கவுக்குற மாதிரி ஒரு மாஸ்டர் பிளான் போட்டு வைத்திருக்கிறார் என்று தெரிகிறது. அத்துடன் இவருடைய மிகப்பெரிய திட்டமே அப்பத்தாவிடம் இருந்து அந்த சொத்தை வாங்குவதும், எஸ் கே ஆர்-ஐ அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஆதரையை கரிகாலனுக்கு கட்டிக் கொடுக்க இருக்கிறார்.

Also read: 6 வருடங்கள் கழித்து காதலனை கரம் பிடித்த ரோஜா சீரியல் பிரியங்கா.. ட்ரெண்டாகும் போட்டோஸ்

அதற்காக இவர் சொன்ன மாதிரி எந்த எல்லைக்கும் போவார் என்று தெரிகிறது. ஆனால் இதற்கெல்லாம் அஞ்சாத ஜனனி, குணசேகரனின் உள்நோக்கத்தை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற மாதிரி நீங்க என்ன வேணாலும் செய்து உங்கள் முடிவை சொல்லுங்கள். அதைப்பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை என்று மிகவும் துணிச்சலாக இருக்கிறார்.

ஆனால் இவருடைய துணிச்சல் மாதிரி மற்ற மருமகள் இல்லாததால் குணசேகரனின் திட்டத்திற்கு ஆளாகி திசைக்கு ஒன்றாக ஓட போகிறார்கள் என்று தெரிகிறது. ஏனென்றால் இவர்களை எந்த மாதிரி பேசினால் எப்படி அடங்கி இருப்பார்கள் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் இவர்களை காப்பாற்றும் விதமாக அப்பத்தாவும் ஜனனியும் ஏதாவது முடிவு பண்ணி குணசேகரனின் திட்டத்தை தவிடு பொடியாக்கி விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: சுந்தரி, கண்ணம்மா நடித்துள்ள N4 படம் எப்படி?. அனல் பறக்கும் விமர்சனம் இதோ!

Sharing Is Caring:

அதிகம் படித்தவை