திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

யாரையுமே நம்பி இல்லாமல் பாக்கியா எடுத்த அதிரடி முடிவு.. கோபியை போல் தட்டு தடுமாறும் செழியன்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா கொஞ்சம் சேர்த்து வைத்த பணத்தையும் நகையும் எடுத்துட்டு ஹோட்டலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பி கொடுத்துடலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார். அப்படி வெளியே போகும் பொழுது ஈஸ்வரிடம் சொல்லிவிட்டு போகலாம் என ஹோட்டல் பிரச்சினையை சமாளிப்பதற்காக நான் என்னுடைய நகையும், இனியாவின் நகையும் அடகு வைப்பதற்கு எடுத்து இருக்கிறேன் என்ற தகவலை சொல்லுகிறார்.

இதை கேட்டதும் ஈஸ்வரி, அவரிடம் இருக்கும் நகையும் எடுத்து பாக்கியாவிடம் கொடுக்கிறார். அது மட்டும் இல்லாமல் தாலிச் செயினையும் கொடுத்து இதை வைத்தும் பணத்தை ரெடி பண்ணிக்கோ என்று சொல்கிறார். பாக்கியா அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் இந்த பிரச்சினை நானே சமாளித்துக் கொள்கிறேன். நான் எந்தவித தவறும் பண்ணவில்லை என்று முழுமையாக நம்புகிறேன்.

அந்த வகையில் இதையும் நிரூபிக்கும் விதமாக நான் கூடிய சீக்கிரத்தில் எல்லா உண்மையும் கண்டுபிடித்து விடுவேன். நீங்கள் எனக்கு நம்பிக்கை கொடுத்து என்னுடன் பக்கபலமாக இருந்தாலே போதும். இந்த நகை அனைத்தும் உங்களிடம் தான் இருக்க வேண்டும். நீங்கள் எப்படி மாமா கட்டிய தாலி செயினை கொடுப்பதற்கு யோசித்தீர்கள்.

இது மாமா கடமைக்காக உங்களுக்கு தாலி கட்டவில்லை உங்களை கடைசி வரை கண்கலங்காமல் பார்த்து, சொன்ன வாக்குகளையும் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார். அதனால் எப்பொழுதுமே இந்த செயின் உங்களிடம் தான் இருக்க வேண்டும் என்று சொல்லி பேங்குக்கு கிளம்புகிறார். அங்கே எழிலும் போயி அம்மாவுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக பேசி எந்த ஒரு உதவியும் பண்ண முடியவில்லை என்ற வருத்தத்திலும் பேசுகிறார்.

உடனே பாக்கியா, நீயும் கஷ்டத்தில் தான் இருக்கிறாய் ஆனால் நான் வந்து உதவவில்லை. உன் கஷ்டத்தை நீயே தானே பார்த்து சமாளித்துக் கொள்கிறாய். அப்படி இருக்கும் பொழுது இதற்கு மட்டும் நான் எப்படி உன்னிடம் உதவியை எதிர்பார்க்க முடியும். அதனால் தேவையில்லாத யோசித்து கவலைப்படாதே. நான் நிச்சயம் இந்த பிரச்சனையை சரி செய்து விடுவேன் என்ற நம்பிக்கையில் பாக்யா, அவரால் முடிந்தவரை பணத்தை ரெடி பண்ண பார்க்கிறார்.

இதற்கு இடையில் பழனிச்சாமி, பாக்கியாவிற்கு உதவி பண்ணும் விதமாக வீட்டிற்கு வந்து பேசுகிறார். ஆனால் பாக்கியா உதவியை ஏற்க மறுத்து விட்டார். உடனே பழனிச்சாமி கடனாக ஆவது வாங்கிக்கோங்க. உங்களால் எப்பொழுது முடிகிறதோ, அப்பொழுது திருப்பி கொடுங்கள் என்று சொல்கிறார். ஆனாலும் பாக்கியா அதெல்லாம் வேண்டாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று பழனிசாமியை திருப்பி அனுப்பி விடுகிறார்.

இதனை தொடர்ந்து செழியனுக்கு வேலை போன விஷயம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரியாது. இதனால் ஜெனி, செழியனிடம் ஏன் இன்னும் ஆபீசுக்கு கிளம்பாமல் இருக்கிறாய் என்று கேட்கிறார். உடனே செழியன் உண்மையை சொல்லாமல் கிளம்ப போகிறேன் என்று ரெடியாகிறார். அந்த நேரத்தில் ஜெனி, நீ சேர்த்து வைத்திருக்கும் பணத்திலிருந்து அத்தைக்கு உதவியாக பணத்தை ரெடி பண்ணி கொடு என்று சொல்கிறார்.

உடனே செழியன், பார்க்கிறேன் என்று சொல்கிறார். இதில் என்ன நீ பார்க்க போகிறாய் ஒழுங்கா பணத்தை எடுத்துக் கொடு என்று ஆர்டர் போடுகிறார். அத்துடன் பாப்பாக்கு தேவையான நிறைய பொருட்கள் வாங்க வேண்டியது இருக்கிறது. நீ ஆபீஸ் முடித்துவிட்டு வரும்போது அது எல்லாத்தையும் வாங்கிட்டு வா என்று சொல்கிறார்.

இதையெல்லாம் கேட்டு தலை சுற்றி போன செழியன் இது என்ன வேலை போனது கூட தெரியாமல் ஜெனி இப்படி பண்ணுகிறாய் என்று புலம்புகிறார். இப்படித்தான் கோபியும் வேலை போனதை மறைத்து தட்டு தடுமாறினார். அதே மாதிரி தான் செழியனும் யாரிடமும் உண்மையை சொல்லாமல் பாக்யாவிற்கும் உதவ மனமில்லாமல் தடுமாறி நிற்கிறார்.

- Advertisement -

Trending News