வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

சீரியல் பக்கம் வந்த கவிஞர் சினேகன், ஜோடியான பிக்பாஸ் பிரபலம்.. வில்லியாக அசத்த போகும் டாப் ஹீரோயின், எந்த சேனல் தெரியுமா?

Pavithra Serial: பொதுவாக இசைத்துறையைச் சேர்ந்தவர்கள் திடீரென படங்களில் ஹீரோவாக நடிப்பது உண்டு. கவிஞர் சினேகன் சற்று வித்தியாசமாக சீரியல் பக்கம் கரை ஒதுங்கி இருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு நிறைய நல்ல பாடல்களை கொடுத்த சினேகன் மக்களிடையே பரீட்சையமானது பிக் பாஸ் சீசன் 1 மூலம் தான்.

இவர் மீது பல கலவையான விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் இறுதி போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார். பிக் பாஸ் முடிந்த கையோடு உலக நாயகன் கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியில் இணைந்தார்.

சீரியல் பக்கம் வந்த கவிஞர் சினேகன்

பின்னர் தன்னுடைய நீண்ட நாள் காதலியான கன்னிகாவை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகு சினேகன் சமூக வலைத்தளங்களில் ரொம்பவும் ஆக்டிவாக இருக்கிறார். சமீபத்தில் கூட தன் மனைவி கர்ப்பமாக இருப்பதை இன்ஸ்டாகிராமில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் சினேகன் தற்போது சீரியல் ஒன்றில் ஹீரோவாக கமிட்டாகி இருக்கிறார். பவித்ரா என பெயரிடப்பட்டிருக்கும் இந்த சீரியலில் சினேகனுக்கு ஜோடியாக அனிதா சம்பத் நடிக்கிறார். இந்த சீரியலின் புரோமோ வீடியோவை பார்க்கும் பொழுது அனிதா பண்ணையார் வீட்டுப் பெண், அங்கு வேலை செய்யும் ஆள்தான் சினேகன் என்பது தெரிகிறது.

இவர்களுக்குள்ளான காதல்தான் சீரியலின் கதையாக இருக்கப் போகிறது. மேலும் இந்த சீரியலில் சுந்தரா ட்ராவல்ஸ் படத்தில் ஹீரோயின் ஆக நடித்த ராதா வில்லியாக நடிக்கிறார். பவித்ரா சீரியல் விரைவில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

- Advertisement -

Trending News