பசங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா.? கோவத்தில் கொக்கரித்த அபிராமி

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அபிராமி. இவர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்த டிஸ்னி ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் அபிராமி பங்கு பெற்றார்.

இந்நிலையில் இதே நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்ற நிரூப்பின் முன்னால் காதலி தான் அபிராமி. இதனால் நிரூப்பை வெறுப்பேற்றும் விதமாக அபிராமி பாலாவுடன் நெருக்கம் காட்டி வந்தார். இதனால் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டுக்குள் பல சர்ச்சைகளும் வெடித்தது.

அதேபோல் அபிராமி சிகரெட் பிடித்த காட்சியும் இணையத்தில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் லைவில் வந்த அபிராமி ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் சிகரெட் பிடிப்பது உண்மையா என்ற கேள்வியை ஒரு ரசிகர் கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த அபிராமி, எனக்கு ஓப்பனா பேசுவதில் எந்த பயமும் இல்லை, அந்த வீட்ல ரொம்ப ஸ்டிரஸா இருக்கும். ரோட்டுல எத்தனையோ பசங்க தம் அடிச்சுட்டு போறாங்க, ஆனா ஒரு பொண்ணு தம் அடிச்சா தப்பா என அவரே ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் மற்றொரு ரசிகர் பாலாவுடன் ஆன சர்ச்சையை பற்றி கேள்வி எழுப்பி இருந்தார்.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நடப்பதை அனைவருமே வெளிப்படையாக பார்க்கிறார்கள். இதில் யாரும் எதையும் மறைக்க முடியாது. மேலும் நாலு பேரு பார்க்கிற ஷோல யாராவது இப்படி நடந்து கொள்வார்களா. நான் மட்டுமில்ல அங்குள்ள யாருமே இது மாதிரி நடந்துக்க மாட்டாங்க.

மேலும், பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற இங்கிதம் எனக்கு தெரியும். அங்கு அதெல்லாம் ஒன்றுமே நடக்கவில்லை என கோபமாக ரசிகர்களுக்கு பதிலளித்துள்ளார். இது மாறி வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என அபிராமி கூறியுள்ளார்.

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -