விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கை அள்ளும் பிரபல நிகழ்ச்சிதான் பிக்பாஸ். தற்போது பிக்பாஸ் சீசன்5 தொடங்கி மூன்று வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்களுடன் ஆரவாரமாய் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் இதுவரை 3 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர்.
நேற்று சற்றும் எதிர்பாராத விதமாக கன்டென்ட்களை அள்ளித்தரும் சினிமா பையன் அபிஷேக் ராஜா போட்டியை விட்டு மக்களின் தீர்ப்பால் வெளியேற்றப்பட்டார். பிரபல யூடியூபர் ஆன அபிஷேக் ராஜா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த நாளில் இருந்து தன்னால் எவ்வளவு தந்திரமாக விளையாட முடியுமோ அந்த அளவிற்கு தந்திரமாகவும் விளையாடினார்.
அதிலும் குறிப்பாக சக போட்டியாளர்களை தனியாக அழைத்துச் சென்று அவர்களை எவ்வளவு குழப்பம் முடியுமோ அந்த அளவிற்கு ஏதாவது சொல்லி அவர்களை குழப்புவதையே வேலையாக வைத்து கேமையும் சுவாரசியமாக்கி கொண்டிருந்தார்.
வந்த முதல் நாளிலிருந்தே தெளிவாக பிளான் போட்ட அபிஷேக் பிரியங்காவுடன் இருந்தால்தான் டிவியில் அதிகமாக தெரிய முடியும் என்று தெளிவாக யோசித்து கேம் ஆடினார். எனவே பிரியங்கா, நிரூப் ஆகியோருடன் கூட்டணி அமைத்துக் கொண்டு மற்ற போட்டியாளர்களை தாறுமாறாகக் கலாய்த்து வெறுப்பேற்றி வந்தார்.
அதுமட்டுமல்லாமல் தான் போட்டியில் தனியாக தெரிய வேண்டும் என்று பல சண்டைகளை வீட்டில் உருவாக்கினார். ஆனால் இவரின் துரதிர்ஷ்டம் இவருடைய கேம் பிளான்கள் அனைத்தும் சொதப்பல் ஆகி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி அவர்களின் ஓட்டு எண்ணும் செல்வாக்கைப் பெற தவறிவிட்டார் பாவம்.
இவரின் ஒரு வார சம்பளம் மட்டுமே ரூபாய் 1.75 லட்சம். ஆக மூன்று வாரங்கள் இவர் இந்த வீட்டிலிருந்து விளையாடி ரூபாய் 5.25 லட்சத்தோடு போட்டியிலிருந்து விடைபெறுகிறார். அபிஷேக் வெளியே சென்றதிலிருந்து ப்ரியங்கா, நிரூப் கூட்டணிக்குள் சலசலப்பு தொடங்கிவிட்டது. இது தொடருமா இவர்கள் நட்பு தொடருமா? என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.